தமிழர் தாயகத்தில் நீண்டநாள் வாழ்ந்த முதியவர் மரணம்: பிரித்தானிய நிர்வாகத்தில் பணிபுரிந்தவர்

OruvanOruvan

A 107-year-old man has passed away

முதுமை என்பது சுமையல்ல என்பதற்கு சிறந்த ஒரு உதாரணமாக வாழ்ந்த பலரையும் நாம் அறிந்திருப்போம்.

முதியவர்களாக மாறும் போது தன்னிலை மறந்து மீண்டும் ஒரு குழந்தையாகவே மாறி விடுகின்றனர்.

ஆரோக்கியம் ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமான ஒன்று, ஆரோக்கியத்தின் வழியில் வாழ்ந்து வாழ்நாள் சாதனையாளர்களாக இறைபதம் அடைந்தவர்களும் உள்ளனர்.

வாழ்நாள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவு செய்து சீரான ஒரு வாழ்வை வாழ்ந்து முடித்த பெருமை நிச்சயம் அவர்களையே சாறும்.

அத்தகைய வாழ்வை வாழ்ந்த பெருமையுடையவராக யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் 107 வயதை நிறைவு செய்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுகயீனம் காரணமாக இவர் இயற்கை எய்தியுள்ளார்.

1917ஆம் ஆண்டில் பிறந்த இவர் தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் வெகுவிமர்சையாக கொண்டாடியிருந்தார்.

இவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள், 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 1 மாத காலமாக சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் ஆங்கிலேயர் ஆண்ட காலப்பகுதியில் அவர்களது நிர்வாகத்தில் இவர் பணிபுரிந்துள்ளார்.

முதலாம் உலகப் போரில் ஆரம்பித்து , இரண்டாம் உலகப்போர் , இலங்கையின் சுதந்திரம், இனக் கலவரம், ஆயுதப்போராட்டம், சமாதானக் காலம் என இலங்கையின் பல அரசியல் நெருக்கடிகளையும் பார்த்த ஒருவராக இவர் உள்ளார்.