ட்ரம்ப் - பைடன் நெருங்கி வரும் நேருக்கு நேர்: சூடுபிடிக்கும் கட்சி வேட்பாளர் வாக்கெடுப்பு

OruvanOruvan

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் அதிபர் ஜோ பைடன் என்பதும், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் முன்னைய அதிபர் டொனல்ட் டிரம்ப் என்பதும் கிட்டத்தட்ட முடிவாகி வருகிறது.

இதனடிப்படையில், ஜனநாயகக் கட்சியில் அதிபர் பைடனுக்குப் பெரியளவில் எதிர்ப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

டெக்சஸ் (Texas), நார்த் கரோலைனா (North Carolina), வெர்மன்ட் (Vermont), வெர்ஜினியா (Virginia) ஆகிய மாநிலங்களில் பைடன் வெற்றிபெற்றுவிட்டார் என்று அமெரிக்காவின் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

குடியரசுக் கட்சி பெரும்பாலும் டொனால்ட் டிரம்ப் பக்கம் தான் சார்பாக செயற்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் டொனால்ட் ட்ரம்புக்கு 1,215 ஆதரவாளர்கள் தேவைப்படுகின்றனர். அவர் Super Tuesday களத்தில், 15 மாநிலங்களையும் கைப்பற்றிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் கைகூடவில்லை.

அவரை எதிர்த்து நிற்கும் நிக்கி ஹேலி (Nikki Haley) Vermont மாநிலத்தில் வென்றுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு

அமெரிக்காவில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இன்று கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வாக்களித்தனர்.

'Super Tuesday' என்றறியப்படும் இன்றைய நாளில் 15 மாநிலங்களைச் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் தங்களது விருப்பமான வேட்பாளரைத் தெரிவு செய்யவிருக்கின்றனர்.

குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய 2 கட்சிகளின் சார்பில் அதிபர் தேர்தல் வேட்பாளராக யார் களமிறங்க வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கவுள்ளனர். 2 கட்சிகளுக்கும் 15 மாநிலங்களில் முதன்மை, முன்னோடி வாக்கெடுப்புகள் நடைபெறுகின்றன.

இந்த வாக்கெடுப்பில் அலஸ்காவில் (Alaska) மட்டும் குடியரசுக் கட்சி வாக்களிப்பு நடக்கிறது. சமோவா (Samoa) வட்டாரத்திலும் மக்கள் வாக்களிக்கின்றனர். பதிவு செய்யப்பட்ட கட்சி உறுப்பினர்கள், சுயேச்சைகள் மட்டுமே வாக்களிக்கின்றனர்.