பாடசாலை பயிற்சி புத்தகங்களுக்கான வற் வரி குறைப்பு: தேர்தலை இலக்கு வைத்து ரணில் வகுக்கும் வியூகம்

OruvanOruvan

sri lanka president ranil wickremesinghe

எதிர்காலத்தில் பெறுமதி சேர் வரியை (VAT) குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) நாடாளுமன்றில் உரையாற்றும் போது, அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்துள்ளது.

அதனால், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அரச வருமானத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த ஆண்டு ஜனவரி மாதம் வற் வரியானது 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

இதன் விளைவாக அரச வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 11 சதவீதமாக உயர்ந்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

வற் வரி விதிப்பால் அரசின் வருமானம் வலுப்பெற்றது. கடனை அடைக்க எம்மிடம் திறன் உள்ளது என்பது சர்வதேச சமூகத்தின் முன் உறுதிபடுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வற் வரி நீக்கப்படும் பொருட்கள்

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் உபகரணங்களை வற் வரியிலிருந்து நீக்குவதற்கு தாம் நம்புவதாக ஜனாதிபதி ரணில் இன்று தெரிவித்தார்.

மேலும் வற் வரியில் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நீக்குவதற்கும் நம்புவதாக அவர் கூறினார்.

ஜனாதிபதியின் தேர்தல் வியூகம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் தற்சமயம் சூடு பிடித்துள்ள நிலையில் கடந்த காலத்தில் அதிகரிக்கப்பட்ட பொருட்களின் விலைகளானது கடந்த சில நாட்களாக குறைவடைந்து வருகிறது.

அதன்படி, எரிபொருள் மற்றும் மின் கட்டணம் என்பவற்றின் விலைகள் கடந்த நாட்களில் குறைக்கப்பட்டன.

அதன், வரிசையாக வற் வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பினை தற்சமயம் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

எனவே, ரணில் விக்ரமசிங்கவின் இந்த அறிவிப்பானது எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்ட ஜனாதிபதியின் வியூகமாக இருக்கலாம் என்றும் விமர்சிக்கப்படுகிறது.