வலுவடையும் இலங்கை பொருளாதாரம்: வாழ்க்கைச் சுமை குறையுமா?

OruvanOruvan

இலங்கையின் பொருளாதாரம் மேலேழும் போக்கு காணப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரியில் 5.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் அதிகரித்துள்ளது. இதன்படி டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 302.97 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 312.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டில் அரிசி உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருட்களில் விலை குறைவடைந்திருந்த நிலையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

கடந்த 2023 இல் குறித்த காலப்பகுதியில் அமெரிக்க டொலரின் பெறுமதி 363 ரூபாவாக இருந்தது. அது நேற்று 308 ரூபாயாக வீழ்ச்சியடைந்து. இது ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் காலாண்டில் இருந்து மீள் எழுச்சி பெற்றுள்ளது.

இந்நிலையில், எதிர்காலத்தில் வற் வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய நாடாளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார்.

வரிவிலக்கு செய்ய தீர்மானம்

மேலும், புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் வற் இல் இருந்து விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு அரச வருவாயை 50 சதவீத்திற்கும் மேல் அதிகரிக்க முடிந்தது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் 2% - 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளனர் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை , 2024 ஜனவரியில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 970.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதற்கமைய, இலங்கையில் விவசாய ஏற்றுமதி மூலமான வருமானம் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.58 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும் , 2024 ஜனவரியில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் கடந்தாண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 0.77% சரிவைக் குறிக்கிறது என்றும் ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.