வாகரை குண்டு வெடிப்பு- ஒருவர் படுகாயம்: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

07.03.2024 North East news

வாகரை குண்டு வெடிப்பு- ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு, வாகரை ஊரியன்கட்டில் பகுதியில் குண்டு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வாகரை தள வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.தமது காணியை துப்பரவு செய்து குப்பைகளை தீயிட்டு எரித்துக் கொண்டிருந்தபோது அதில் இருந்த மர்ம்மப் வெடிப் பொருள் பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அகற்றப்பட்டது சுழிப்புரத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குறித்த சிலை அங்கிருந்து தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, குறித்த புத்தர் சிலையை அகற்றக்கோரி முன்னெடுக்கப்படவிருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

கடமைகளை பொறுப்பேற்ற யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்

யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மாவட்டப் பதில் அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார்.

OruvanOruvan

நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக விபத்து - வைத்தியசாலையில் லொறி சாரதி

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி கடை கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

OruvanOruvan

இலங்கை வரலாற்றில் முதன்முதலாக வெளிநாட்டு தலைவர்களின் பங்குபற்றுதலுடன் சமாதான மாநாடு

கப்சோ அமைப்பினால் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக அப்பாறை மாவட்டத்தில் உள்ள மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் சமாதான மாநாடொன்று நடத்தப்பட்டது. கப்சோவின் திட்டப்பணிப்பாளர் எ. ஜே காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் வரலாற்றில் முதல் முறையாக இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் சிறி வால்ட், ஜப்பானிய தூதுவர் மிஸுகோஷி ஹிடேக்கி, இலங்கைக்கான தென்னபிரிக்க தூதுவர் சண்டில் எட்வின் ஸ்கல்க் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

சீமெந்து லொறி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயம்

பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றும் லொறி நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடை கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதி காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதுடன் லொறியும் சேதமடைந்துள்ளது.

யாழ்.பல்கலைக் கழகத்திற்கு விஜயம் செய்த துணைத்தூதுவர்

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தார்.
அங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.

OruvanOruvan

அனுமதியுமின்றி செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்துக்கு தடை

யாழ். வல்வெட்டித்துறையில் எதுவித அனுமதியுமின்றி செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுவரையில் பதிவு செய்யாமல் எந்தவித வசதிகளுமின்றி இயங்கியமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கள்ளச்சாராயத்துடன் பெண்ணொருவர் கைது

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 20 லீற்றர் கள்ளச்சாராயம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.