சாந்தனின் இறுதி ஆசையை நிறைவேற்றிய தாய்: பார்ப்பவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியது
சாந்தனின் தாய், தமது உயிரிழந்த மகனுக்கு உணவு ஊட்டியுள்ளார். இது பார்ப்பவர்களை மேலும் துயரத்திற்கு உள்ளாக்கியிருந்தது.
தனது தாயின் கையால் ஒரு வேளை உணவு உண்ண வேண்டும் என்பது சாந்தனின் இறுதி ஆசையாகவும், தமது மகனுக்கு பல்சுவை உணவுகளை சமைத்துக் கொடுக்கவேண்டும் என்பது சாந்தனின் தாயின் இறுதி ஆசையாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இது இறுதிவரை நிறைவேறாக ஆசையாகவே போனது.
இந்நிலையில்,சாந்தனின் பூதவுடலுக்கு தாயார் உணவு ஊட்டிய காணொளி பார்ப்பவர்களின் கண்களை கலங்கவைத்துள்ளது.