சினோபெக் எரிபொருள் விலைகளிலும் மாற்றம்: இன்று நள்ளிரவு முதல் அமுல்

OruvanOruvan

சினோபெக் நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை மாற்றியமைத்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 447 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டள்ளது.

அத்துடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 458 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 92 ஒக்டேன் லீற்றர் பெற்றோல் மற்றும் ஒடோ டீசலின் விலையில் நிறுவனம் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

சினோபெக் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 368 ரூபாவாகவும் , சினோபெக் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை360 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

OruvanOruvan

எரிபொருள் விலை குறைப்பு : வெளியான புதிய விலை விபரங்கள்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 447 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 458 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 257 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை மற்றும் ஒட்டோ டீசலின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan