சாந்தனின் உயிர் தியாகம்- அணிதிரள அழைப்பு: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்....

OruvanOruvan

North - East news updates 04.03.2024

சாந்தனின் உயிர் தியாகம்- அணிதிரள அழைப்பு

மறைந்த சாந்தன் சிறையில் அடைக்கப்பட்டதும், சிறையிலிருக்கும் போது உயிரிழந்ததும் ஈழத் தமிழர்களுக்காகவே. எனவே அன்னாரது உயிர் தியாகம் இன்று மக்கள் வெள்ளத்தால் நிறையட்டும். கண்ணீர் கடலால் விடை கொடுப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க.சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய எல்லைக்குள் போராட்டம் - மீனவர்கள் எச்சரிக்கை

இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்காக இந்திய எல்லைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தத் தயாராக இருப்பதாக வடமாகாண மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.இந்திய எல்லைக்கு செல்வோமாயின் என்ன நடக்கும் என்பதும் எமக்குத் தெரியும்.உயிரச்சுறுத்தல் வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம் என மீன்பிடி சமாஜங்களின் கூட்டுறவு சங்கத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் காணிகளை விடுவிக்க படையினர் இணக்கம்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் மேலும் ஒரு தொகுதி காணிகளை விடுவிக்க படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். அதன்படி, இம்முறை இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள சுமார் 164 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.