வடக்கு ஆளுனர்-பாதுகாப்புச் செயலர் சந்திப்பு: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

North - East 05.03.2024

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றுள்ளது.

விபத்தில் பலியான சாவகச்சேரி மாணவனுக்கு இறுதி அஞ்சலி

யாழ்ப்பாணம் - மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் செல்வன் சி.பரணிதரனுக்கு பாடசாலை மாணவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இறுதி ஊர்வலத்தின் போது, சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் டிறிபேர்க் கல்லூரி மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பிரஜா உரிமை

90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்கள் நாடு திரும்பியிருந்த நிலையில், நாட்டிற்கு வந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பிரஜா உரிமை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், 22 வயதுக்கு மேற்பட்ட 71 பேருக்கு இன்று பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.

திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வில் தமிழ்நாடு மைலம் பொம்புரம் ஆதீனம் பங்கேற்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற 3ஆம் நாள் (04.03.2024) சிவராத்திரி நிகழ்வில் தமிழ்நாடு மைலம் பொம்புரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் விசேட அழைப்பாளராக கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை வழங்கினார்.

OruvanOruvan

அழுகிய நிலையில் சடலம் மீட்பு

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

OruvanOruvan

வடக்கு ஆளுனர் - சுகாதார அமைச்சரிடையே விசேட சந்திப்பு

வடக்கு மாகாணத்தில் சுகாதார துறைக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதால் சுகாதார துறையினர் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுனரால், சுகாதார அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது. வடக்கில் இதுவரை நிரப்பப்படாத ஆளணி மற்றும் ஆளணி வெற்றிடங்களுக்கான மாற்றீடுகள் தொடர்பில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என வடக்கு மாகாண ஆளுநரிடம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இந்த சந்திப்பின்போது உறுதியளித்தார்.

நல்லை ஆதீன குருமுதல்வரிடம் ஆசி பெற்ற இந்திய துணைத்தூதர்

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

OruvanOruvan

புங்குடுத்தீவில் மீனவர்கள் போராட்டம்

கடல் வளங்களையும்,கடற்றொழிலாளர்களையும் அழிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து மீனவர்களினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

OruvanOruvan

யாழ். சுழிபுரத்தில் புத்தர்சிலை- மக்கள் மத்தியில் அச்சம்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் மத்தியில் சலனம் ஏற்பட்டுள்ளது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.புத்தர் சிலையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

OruvanOruvan

மன்னார் அடம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை உயிரிழப்பு

மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று (4) திங்கட்கிழமை மாலை 5.45 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை மரிசால் டிலான் (வயது-34) உயிரிழந்துள்ளார்.

OruvanOruvan

இலங்கை- இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி யாழில் பேரணி

இலங்கை- இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கோரி, வட மாகாண மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை யாழில் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் சூறையாடப்பட்ட தேக்கு மரங்கள்

மன்னார் மடுவில் பகுதியில் வீதியோரங்களில் காணப்பட்ட தேக்கு மரங்கள் அடையாளந்தெரியாதவர்களால் வெட்டப்பட்டு குற்றிகளாக வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. கிளைகள் வீதிகளில் விட்டு செல்லப்பட்டதையடுத்து குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

OruvanOruvan