சதுப்புநில மறுசீரமைப்புக்கான ஐ.நா விருதை வென்ற இலங்கை: தீவின் கண்டல் தாவர சுற்றுச்சூழல் மீளுருவாக்கத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்

OruvanOruvan

Dr Anil Jasinghe, Prof Sevvandi Jayakody and Sri Lankan team after receiving the award

தமது சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளை புனரமைப்பதிலும் புத்துயிர் பெறுவதிலும் முன்னுதாரணமான பணிகளுக்காக இலங்கை 2024 ஐ.நா.வின் உலக மறுசீரமைப்பு முதன்மைக் குழுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் காலநிலை மாற்ற அலுவலகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் ஜாசிங்க மற்றும் வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் செவ்வந்தி ஜெயக்கொடி ஆகியோர் கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபையில் செவ்வாய்க்கிழமை (28) இந்த விருதை ஏற்றுக்கொண்டனர்.

அவர்களுடன் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன மற்றும் உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2024 ஆண்டு இலங்கைக்கு ஐ.நாவினால் உலக மீள்காடாக்களில் அங்கீகரிக்கப்பட்ட மிகச்சிறந்த அடைவை அடைந்துள்ளது, இது நாட்டின் கண்டால் தாவர சூழலின் மீளுருவாக்கப் பெரும் முயற்சிகளுக்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

OruvanOruvan

இந்த விருது, கண்டல் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான ஐ.நா.வின் கொள்கைகளை திறம்பட பயன்படுத்துவதைக் குறிக்கிறது, அதே நேரத்தில் உலகளவில் குறிப்பிடத்தக்க சிறந்த மீளுருவாக்கல் நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளினூடாக எதிர்கால வெற்றிக்கு பங்களிக்கும் கட்டமைப்பு சாத்தியாக்கூறாக அமைகிறது.

2004 ஆண்டு சுனாமியின் பின்விளைவுகளும் இலங்கையின் கரையோரத்தில் அதன் அழிவுகரமான தாக்கங்களும் கடலோரப் பாதுகாப்பாளராக கண்டல் தாவரங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டின.

துரதிர்ஷ்டவசமாக, கண்டல் தாவரங்கள் தொடர்ச்சியான அழிவு மற்றும் முறையான பாதுகாப்பு மற்றும் மீளுருவாக்கம் வழிமுறை போதாமையாக இருந்தன.

இலங்கையின் கரையோர சுற்றுச்சூழலை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு 2015 மற்றும் அதற்குப் பின்னரும் ஆரம்பமானது, மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளானது நிபுணர் குழுக்கள், பணிக்குழுக்கள், கொள்கைகள், செயல் திட்டங்கள் மற்றும் மறுசீரமைப்பு வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் மூலம் மேலிருந்து கீழாக மற்றும் கீழிருந்து மேல் கூட்டணிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் நிறைவேற்றப்பட்டது.

தேசத்தின் புரட்சிகர அணுகுமுறையில் முதன்மையாக அறிவியல் உந்துதலுடன் கண்டல் காடுகளின் மீளுருவாக்கம் செயல்படுத்தப்பட்டுவருகிறது, மேலும் சுற்றுச்சூழல் அதன் சேவைகளை புத்துயிர் பெற்றுக்கொள்வதினை அடிப்படையாக கொண்டு கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த இரு முனை அணுகுமுறை முழு சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையையும் அதன் இணைப்பையும் மீட்டெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எதிர்கால மீளுருவாக்க தலைவர்களாக இளைஞர்களின் ஈடுபாடு மற்றும் அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் துறை, கல்வித்துறை மற்றும் சமூகம் ஆகியவற்றில் பல பங்குதாரர் குழுக்களின் அணிதிரட்டல் எதிர்காலத்திற்காக கட்டமைக்கப்பட்ட மீள்காடாக்களின் புதிய முன்னுதாரணமாக உச்சத்தை எட்டியுள்ளது.

ஐநா முதன்மை மறுசீரமைப்பு விருது என்பது இலங்கை தீவு முழுவதவதுமான எண்ணற்ற உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங் களுக்கு பங்களுகக்கூடிய அத்தியாவசிய சுற்றுச்சூழல் அமைப்புகளை மீள்கட்டியெழுப்பும் மற்றும் நீடித்த தீர்வுகளுக்கான செயற்படுகளுக்குரிய சரியான நேரத்திலான அங்கீகாரமாகும்.

27 பிப்ரவரி 2024 அன்று நைரோபியில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபையில் இந்த விருதை நாடு பெற உள்ளது.