தாயகம் வரும் சாந்தனின் வித்துடல்: கொழும்பிலிருந்து யாழிற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு

OruvanOruvan

Shanthan's Body

உயிரிழந்த சாந்தனின் உடல் விமானம் மூலம் நாளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான உத்தரவினை இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி நாளை காலை 6 மணிக்கு சாந்தனின் சடலம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து எடுத்துவரப்பட்டு, காலை 7 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என சாந்தன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சாந்தனின் இறுதி கிரியைகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இதேவேளை தாயகத்தில் சாந்தனின் பூவுடலுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த மக்கள் தயாராகி வருகின்றனர்.