சஜித் பிரேமதாச யால காட்டுக்குச் செல்ல நேரிடும்: புதிதாக ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது

OruvanOruvan

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘‘மார்ச் 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி குளியாபிட்டிய பிரதேசத்தில் பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான உறுப்பினர்கள் எமது கட்சியில் இணையவுள்ளனர்.

அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யால காட்டுக்குச் செல்ல நேரிடும்.

எவ்வாறாயினும், சஜித் பிரேமதாசவை பாதுகாப்பதற்காக யால காட்டில் ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் 85 க்கும் மேற்பட்ட குழுக்கள் இணையவுள்ளன.

கடந்த வார இறுதியில் சில அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன்படி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடமாட்டார்.‘‘ என அவர் வலியுறுத்தினார்.