வெல்லாவெளியில் ஆணின் சடலம் மீட்பு: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North - east news updates 29.02.2024

வெல்லாவெளியில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள காந்திபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆணின் மரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குருந்தூர்மலை விவகார வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

குருந்தூர்மலை தொடர்பான வழக்குஇன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் ஜுலை மாதம் 25 ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள குரங்குகளின் தொல்லை

தினமும் கொத்து கொத்தாக 300 இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடமாடி வருவதுடன் இவ்வாறு அதிகரித்து வருகின்ற குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

சாரதிகள், நடத்துனர்கள் அரச போக்குவரத்துக்கு சொந்தமான பேரூந்துகளை மறித்து போராட்டம்

தனியார் போக்குவரத்து துறை சாரதிகள், நடத்துனர்கள் அரச போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் அனைத்து தனியார் பேருந்து சேவைகளும் முற்றாக இடைநிறுத்தம்

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள், அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

OruvanOruvan

Jaffna

திருகோணமலையில் தாமரைப்பூ பறிக்கச் சென்றவர் குளத்தில் மூழ்கி மரணம்

திருகோணமலை அருகே குளமொன்றில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . உயிரிழந்தவர் ஈச்சிலம்பற்று - பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய கனகசுந்தரம் விவேகானந்தன் என்று தெரிய வந்துள்ளது.

வடக்கு ஆளுனருடன் இந்திய துணைத் தூதுவர் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதுவடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (28) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

OruvanOruvan

தமிழரசுக் கட்சியின் காலம் முடிந்துவிட்டது- சுரேஷ் பிரேமச்சந்திரன்

கடந்த 2017ம் ஆம் ஆண்டே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டோம். தமிழரசுக் கட்சியின் காலம் முடிந்துவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.