பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்து: 24 பாடசாலை மாணவர்கள் உட்பட 36 பேர் வைத்தியசாலையில்

OruvanOruvan

Bus accident

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

சியம்பலாண்டுவ - மொனராகலை பிரதான வீதியின் கொடையான பகுதியிலேயே குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புத்தமவில் இருந்து மெனராகலை நோக்கி பயணித்த சியம்பலாண்டுவ டிப்போவுக்கு சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட மொத்தம் 36 பேர் காயமடைந்தள்ளதாக சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவன் செய்திச் ச‍ேவையிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

வேகமாக பயணித்த குறித்த பேருந்து கொடையான பகுதியில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளனதாகவும் சியம்பலாண்டுவ பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

OruvanOruvan

Bus accident

விபத்து தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம், விபத்தில் காயமடைந்த பயணிகள் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்பதையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சியம்பலாண்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

OruvanOruvan

Bus accident