வெள்ளவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம்: விசாரணை ஆரம்பம்

OruvanOruvan

Gunshots - Wellawatta

வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.