கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வு என்கிறார் டக்ளஸ்: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

North & East 28.02.2024

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வு என்கிறார் டக்ளஸ்

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை இணக்கப்பாட்டுடன் தீர்ப்பதற்கான கலந்துரையாடலில் ஈடுட தாம் தயாராக இருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தினை தமிழக கடற்றொழில் அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

போதைப்பொருளுடன் கைதான பெண்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்துமுன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 165மில்லிகிராம் ஐஸ் மற்றும் 3900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழியர்கள் போராட்டம்; தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஸ்தம்பிதம்

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம், முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான இரு நாட்கள் கொண்ட அடையாள வேலை நிறுத்தத்தின் எதிரொலியாக இன்று தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன.

OruvanOruvan

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

OruvanOruvan

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களின்; சம்பளப் பிரச்சினை மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி இன்று புதன்கிழமை மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலைய முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

OruvanOruvan

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிப்பிரதேசங்களுக்கான பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தம்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிப்பிரதேசங்களுக்கான நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று முதல்(28) தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் தெரிவித்திருந்தார்.

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி - அரசியல்வாதி ஒருவர் கைது

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புலிபாய்ந்தகல் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிபாய்ந்தகல் பகுதியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

எய்ட்ஸ் தொற்றுக் காரணமாக யாழில் ஒருவர் உயிரிழப்பு

கடந்த வருடம்(2023) எய்ட்ஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டம் பிற்போடப்பட்டது


தமிழரசுக்கட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.வவுனியாவில் உள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று குறித்த கூட்டம் இடம்பெற இருந்த நிலையிலேயே திகதியிடப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் யுத்தத்திற்கு பின்னரான முதல் விவசாய குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தின் 2024ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டுக்கான பிரதேச விவசாயக்குழுக் கூட்டம் நேற்று (27) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முதன் முதலாக குறித்த விவசாய குழு கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள யாழ் தனியார் பேருந்து உரிமையாளர்கள்

தனியார் பேருந்துகளை நிறுத்துவதற்கான போதிய தரிப்பிட வசதி இல்லாத நிலையை மாற்றித் தருமாறு கோரி யாழில் இன்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்று யாழ்.மாவட்டத்திலிருந்து எந்தவொரு பேருந்தும் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் புதிதாக மதுபானசாலை ஒன்றை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.