மஹிந்தவுக்கு 'சிவப்பு ரை' அணியும் ரணில்: ஏழு தசாப்தங்களாக இலங்கையை ஆட்டிப்படைக்கு பாரம்பரிய, மேற்கத்தேய உடை அரசியல்

OruvanOruvan

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் இரகசியப் பாத்திரம் பற்றி ஜேம்ஸ் மேனர் (James Manor) எழுதிய புத்தகத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

”பண்டாரநாயக்க உள்ளூர் பருத்தித் துணியால் செய்யப்பட்ட தேசிய உடையை அணிந்துகொண்டு பொது மக்களிடம் செல்லும்போது வீட்டில் கால்சட்டை அணிவார்.

OruvanOruvan

நாய் சண்டை (dogfights ) மற்றும் பில்லியர்ட்ஸ் (மேசைக்கோற் பந்தாட்டம்) விளையாட கிளப்புக்கு செல்லும்போது அவர் கோர்ட் சூட் அணிந்து செல்வார்.

“ரை கோட்“ பொருத்தமானதல்ல

தந்தையின் இறுதிச் சடங்கில், அவர் தனது தேசிய ஆடைகளைக் கழற்றி, மேல் தொப்பி மற்றும் கோர்ட் சூட் அணிந்து தனது தந்தையின் உடலை எடுத்துச் சென்றார்.” எனக் கூறப்பட்டுள்ளது.

ஜே.ஆர்.ஜெயவர்தன வெளியில் செல்லும் போது தனது தேசிய உடையையும், வீட்டில் கால்சட்டையையும் அணிந்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், டி.எஸ், சேர் ஜோன் மற்றும் டட்லி ஆகியோர் “ரை கோட்“ அணிந்திருந்தனர்.

1960 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், டட்லியின் சகாக்கள், இலங்கையில் அரசியலுக்கு “ரை கோட்“ பொருத்தமானதல்ல என்று டட்லியிடம் சுட்டிக்காட்டினர்.

டட்லி தயக்கத்துடன் தனது தேசிய உடையை அணிந்து கொண்டு அலரிமாளிகைக்கு சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.

தேசிய உடையை அணிந்த சுதந்திரக் கட்சி

இலங்கையில் மக்கள் கால்சட்டை அணிந்து வெளியே செல்கின்றனர். ஆனால், வீட்டில் புடவை உடுத்த வேண்டும். அவர்களுக்கு எல்லாம் தெரிந்ததே.

OruvanOruvan

பண்டாரநாயக்க மற்றும் ஜே.ஆர்.கள் வெளியில் செல்லும் போது கோர்ட் சூட் அணிந்தனர். வீட்டில் கால்சட்டை அணிந்தனர்.

ஆனால், பண்டாரநாயக்க தேசிய உடையை அரசியலின் அடையாளமாக ஆக்கினார்.

1956 ஆம் ஆண்டில், அவர் மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் தொழிலாளர்களை உள்ளடக்கிய சங்கமொன்றை உருவாக்கினார். இந்த சங்கம் மேற்கத்திய ஆடை மற்றும் தேசிய ஆடைகளுக்கு இடையே ஒரு போரைத் தொடங்கியது.

ஐ.தே.க ஆதரவாளர்கள் ரை கோட் மற்றும் கால்சட்டை அணிந்த மேற்கத்தியர்கள், மேற்கத்திய பாணியில் இருந்தனர்.

OruvanOruvan

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் தேசிய உடையை அணிய ஆரம்பித்தனர்.

மீண்டும் ரணில் ஆரம்பித்த ரை கோர்ட் அரசியல்

இதனால் ஜே.ஆரும், பிரேமதாசவும் மேற்கத்திய உடை கைவிட்டுவிட்டு தேசிய உடையை அடையாளப்படுத்தும் அரசியலை ஐ.தே.கவில் ஆரம்பித்தனர். இருவரும் தேசிய உடை அணிந்தனர்.

ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்ற பின்னர் மீண்டும் இந்த ரை கோர்ட் அரசியல் முன்னோக்கி நகர்ந்தது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தேசிய உடையை அணிந்திருந்தார். இந்த உடை ரை கோர்ட் உடை அணிந்திருந்த ரணிலுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. மஹிந்த தமது உடைக்கு மேல் சிவப்பு சால்வையையும் ஏந்தியிருந்தார்.

OruvanOruvan

மஹிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரச்சாரத்தை ஜே.வி.பி சந்தைப்படுத்தியதால், மஹிந்தவின் “சிவிப்பு சால்வை“ அரசியலில் சிக்கி ரணில் தோல்வியை தழுவினார்.

மஹிந்தவின் பாணியில் களமிறங்கிய மைத்திரி

“ரை கோர்ட் அணிந்த மேற்கத்திய ரணில் உங்களுக்கு வேண்டுமா? அல்லது தேசிய உடை அணியும் தேசியத் தலைவர் மஹிந்த...?“ என்ற கேள்விதான் மஹிந்தவின் மேடையில் அப்போதைய ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க மற்றும் ஜே.வி.பியின் தலைவர்களால் கேட்கப்பட்டது.

ஜே.வி.பி உருவாக்கிய அந்த தேசிய அலையில் மகிந்த நன்றாக நீந்தினார். 2010 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளராக சரத் பொன்சேகா களமிறங்கினார்.

இராணுவ சீருடையை கழற்றிவிட்டு ‘தேசிய உடை’ ஐ அவர் அணிந்திருந்தார். அது மகிந்தவின் தேசிய உடைக்கு சவால் விடும் வகையில் இருந்தது.

OruvanOruvan

2015 இல் மைத்திரிபால சிறிசேனவும் தேசிய உடை அணிந்திருந்தார். தமது கிராமத்து பாணியிலான கதைகளை நன்றாக பயன்படுத்தி மஹிந்தவின் தேசிய பிம்பத்தை மைத்திரி உடைத்தார்.

கோத்தாவின் முதல் தோல்வி

மகிந்தவின் தேசிய உடைக்கும் ரணிலின் ரை கோர்ட் மோதலுக்கும் இடையில் கோத்தாபய ராஜபக்ச சிக்கிக் கொண்டார். அவர் ரை கோர்ட் அணியாமல், புஷ் சேர்ட் (bush shirt) மற்றும் கால்சட்டை அணிந்து தான் பாரம்பரிய அரசியல்வாதி இல்லை என்பதைக் வெளிப்படுத்தினார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், ராஜபக்ச குடும்பத்தினரின் பாரம்பரி உடையையும் சிவப்பு சால்வையையும் அணியாது சிவப்பு ரை கோர்ட் அணிந்து உரையாற்றினார்.

கோத்தபாயவுக்கும், ராஜபக்ச குடும்பத்துக்கும் இடையே முதல் மோதல் உருவானதும் இந்த உடையில்தான். சுதந்திர தினத்தன்று, அவர் தனது அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களுக்கு மத்தியில் தேசிய உடை அல்லது ரை கோட்டை அணியாது புஷ் சேர்ட் அணிந்திருந்தார்.

OruvanOruvan

2005 இல், ரை கோர்ட் வேண்டாம், தேசிய உடையும் சிவப்பு சால்வையும்தான் சிறந்தது என்று கூறி தேசபக்தி அரசியலை ஆரம்பித்த ராஜபக்சர்களின் உடைக்கு கோத்தாபய ராஜபக்சதான் முடிவும் கட்டினார்.

தற்போது ரை கோர்ட் அரசியல்தான் சிறந்தது என ராஜபக்சர்களை ரணில் குறிவைத்துள்ளார். அடுத்த தேர்தலில் ரை கோர்ட் அரசியலுக்கு ஆதரவாகவே ராஜபக்சர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.

பிரபல்யமாகும் சிவப்பு ரை

தேசிய உடைகளை அணிந்துவந்த ஷெஹான் சேமசிங்க, மஹிந்தானந்த அளுத்கமகே உட்பட ஆளுங்கட்சியின் பலர் ரை கோர்ட் அரசியலுக்கு மாறியுள்ளனர்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிவப்பு சால்வையை தேட மாட்டார்கள். அவர்கள் சிவப்பு ரைகளையே தேர்வு செய்ய வேண்டும்.

பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா இலங்கையில் சிவப்பு ரை அணிவதில் பிரபலமானவர். பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் பட்டியலில் முக்கிய நபராகவும் இருந்துவந்தார். தற்போது ரணில்தான் வேட்பாளர் என்பது ஆளுங்கட்சியில் பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

OruvanOruvan

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிவப்பு ரையை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தினார். 2000ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் தேர்தல் வெற்றியைக் காட்டும் வரைபடத்தின் நிறமும் சிவப்பாக இருந்தது.

யுஎஸ்ஏ டுடே (usa today) செய்தித்தாள் அமெரிக்க வரைபடத்தில் குடியரசுக் கட்சியின் வெற்றியை சிவப்பு நிறத்தில் காட்டியது. இப்போது இலங்கையிலும் சிவப்பு நிற ரை பிரபல்யமாகி வருகிறது.

அண்மையில் இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பில் சென்றிருந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க அணிந்திருந்த கோர்ட் சூட் மற்றும் சிவப்பு நிற ரை தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சு.நிஷாந்தன்

OruvanOruvan