புற்றுநோய் உயிர் பிழைப்பு விகிதத்தில் 15 ஆண்டுகள் பின்தங்கிய பிரித்தானியா: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

OruvanOruvan

Cancer patients suffering

பிரித்தானியாவில் புற்றுநோய் உயிர் பிழைப்பு விகிதம் மற்ற சில நாடுகளை விட 10 முதல் 15 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

கனடா, நோர்வே, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளைச் சேர்ந்த புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை மூலம் எந்த அடிப்படையில் அடிக்கடி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை ஒப்பிட்டு குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் மேற்குறித்த மூன்று நாடுகளுக்கும் பின்னால் பிரித்தானியா இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

மேலும், ஐந்தாண்டு உயிர்வாழ்வு விகிதங்கள் அதிகமாக இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

வைத்திய நிபுணரின் கருத்து

சர்வதேச புற்றுநோய் பெஞ்ச்மார்க்கிங் பார்ட்னர்ஷிப்பிற்கான மருத்துவ முன்னணி மற்றும் கருப்பை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜான் பட்லர் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

பிரித்தானியாவில் "வாழ்க்கை நீடிக்கும் சிகிச்சை " அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்மூலம் சிகிச்சை பெறுவதற்கான தவறிவிட்ட வாய்ப்புகளை மீண்டும் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக இது அமைந்தது என்றார்.

மேலும், கருப்பை, நுரையீரல் மற்றும் கணைய புற்றுநோய் போன்ற பல ஆக்கிரமிப்பு புற்றுநோய்களுக்கு மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்கள் வெகுவிரைவில் அடையாளம் காணப்பட்டு சிகிச்சையைத் தொடங்குவது இன்றியமையாதது என்று அவர் கூறினார்.

இங்கிலாந்தில் கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையின் குறைந்த பயன்பாடு மக்களின் உயிர்வாழ்வதற்கான குறிப்பாக வயதான நோயாளிகளுக்கு ஆயுளை குறைப்பதற்கும் வாய்ப்பு அதிகமான இக்கின்றது.

15 ஆண்டுகள் பின்தங்கியுள்ள பிரித்தானியா

பிரித்தானியாவில் புற்றுநோய் உயிர்வாழ்வது முன்னணி நாடுகளை விட இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது என்பத இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர்ச்சியூட்டும் விடயமாகும்.

780,000 க்கும் அதிகமான மக்கள் புற்றுநோயாளர்கள்

இன்டர்நேஷனல் கேன்சர் பெஞ்ச்மார்க்கிங் பார்ட்னர்ஷிப் மற்றும் கேன்சர் ரிசர்ச் பிரிட்டனின் பகுதி நிதியுதவி மூலம் கடந்த 2012 மற்றும் 2017 க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,

780,000 க்கும் அதிகமான மக்கள் புற்றுநோயாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சில கண்டுபிடிப்புகளில், இங்கிலாந்தில் உள்ள பெருங்குடல் புற்றுநோயாளிகளில் 29விகிதமானோர் அந்த காலகட்டத்தில் கீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்டனர்,

அதில் சிகிச்சை பெறுவோர் விகிதம் கனடா மற்றும் ஆவுஸ்திரேலியாவில்34 விகிதமும், நோர்வேயில் 31விகிதமாக இருந்தது.

ஆனால்,தற்போது அது கணிசமாக அளவு அதிகரித்ததுடன் இங்கிலாந்தில் 27விகிதம், கனடாவின் 41விகிதம், நோர்வேயின் 47விகிதம் மற்றும் ஆஸ்திரேலியாவில் 50 விகிதம் கீமோதெரபியைப் பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஏனைய சிகிச்சைகளைப் பொறுத்தவரை, மற்ற நாடுகளுக்கு முறையே 59விகிதம், 53விகிதம் மற்றும் 54விகிதம் உடன் ஒப்பிடும்போது, 31% UK ஓசோஃபேஜியல் புற்றுநோயாளிகள் கதிரியக்க சிகிச்சையைப் பெற்றனர்.

UK இல் மூன்றாம் நிலை பெருங்குடல் புற்றுநோயாளிகளின் ஐந்தாண்டு உயிர்வாழ்வு விகிதம் 63% ஆக உள்ளது, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் 70%, நார்வே 71% ஆக உள்ளது.