இலங்கை கடல் எல்லையில் கறுப்புக் கொடி போராட்டம்: விடுக்கப்பட்ட அறிவிப்பு

OruvanOruvan

Black flag Protest

நாட்டின் கடற்பரப்புக்குள் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை கடல் எல்லையில் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

குறித்த போரட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 03ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாகத் தெரவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அதன் பிரதிநிதிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.