வல்லரசு நாடுகள் இலங்கையை தமது காலனியாக கருதுகின்றன: வெளிநாட்டு நிறுவனங்கள் உடன்படிக்கைகளை மீறுகின்றன

OruvanOruvan

இலங்கை மற்றும் நாட்டின் துறைமுகங்கள் உட்பட பொது சொத்துக்களை உலக வல்லரசுகள் மற்றும் அந்நாடுகளின் நிறுவனங்கள் தமது காலனியாக கருதுவதாக முன்னிலை சோசலிசக்கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பிராந்திய வல்லரசுகள்,ஏகாதிபத்திவாதிகள் மாத்திரமல்ல, வெளிநாட்டு நிறுவனங்கள் கூட இலங்கையின்நிறுவனங்கள் பயன்படுத்தும் விதத்தை பார்க்கும் போது இந்நாடு அவர்களின் காலனியா நினைத்து செயற்படுவதாக தெரிகிறது.

அந்த நிறுவனங்கள் தமது பல்வேறு திட்டங்கள் தொடர்பான உடன்படிக்கைகளை மீறி செயற்பட்டு வருகின்றன.

கொழும்பு துறைமுக நகரத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தை சீன நிறுவனம் ஒன்று பெற்றுக்கொண்டது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் ஜயா முனையம் ஆகியவற்றை விரிவுப்படுத்தும் ஒப்பந்தத்தை அதே நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.

இதற்கான அந்த நிறுவனம் துறைமுக அதிகார சபை மற்றும் அரசாங்கத்திற்கு பணத்தை செலுத்தியுள்ளது எனவும் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.