ஐ.மக்கள் சக்தியில் இணைய பேச்சு நடத்தும் சுதந்திரக்கட்சியின் முக்கிஸ்தர்கள்: ஒருவர் கூட்டணி ஒன்றில் முக்கிய பதவியில் இருப்பவர்

OruvanOruvan

SLFP `and SJB

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிக்கும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு முக்கிய அரசியல்வாதிகள், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் ஒரு அரசியல்வாதி, கூட்டணி ஒன்றில் முக்கிய பதவி வகித்து வருபவர் என்பதுடன் மற்றைய அரசியல்வாதி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியை வகித்து வருபவர் என கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தாலும் அவர்களுக்கு அந்த கட்சியில் தொகுதி அமைப்பாளர் பதவிகள் வழங்கப்படாது என பேசப்படுகிறது.

இவர்ளுக்கு பதிலாக வேறு இருவரை தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் அடுத்தாண்டு பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில்,பல கட்சி தாவல்கள் நடைபெறலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் கட்சி தாவும் அரசியல் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.