மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்

OruvanOruvan

Short Stories 25.02.2024

மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இலங்கையிலுள்ள 10,126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான 100,000 பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் சஜித்தின் மகளது புகைப்படம் வெளியானது

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் நேற்று கண்டியில் தனக்கு மகள் இருப்பதாக தெரிவித்து, சில மணி நேரங்களுக்கு பின்னர் இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.

OruvanOruvan

OruvanOruvan

கொழும்பில் துப்பாக்கி பிரயோகம்

கொழும்பு ஜம்படாவீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளார். இந்நிலையில் காயமடைந்த நபர் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது நாளாக தொடரும் மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள ஐந்து மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், 2018ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள 151 விசைப்படகுகளை விடுவிக்க கோரியும் இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெப்பமான காலநிலை ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும்

நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கொழும்பு கம்பஹா குருநாகல் புத்தளம் அனுராதபுரம் பொலன்னறுவை திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் அதிக வெப்பமான காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டையில் கீரி சம்பா பயிர்ச் செய்கை வெற்றி

ஹம்பாந்தோட்டை - அகுனகொலபெலஸ்ஸ மெடிகத்வல பிரதேசத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கீரி சம்பா பயிர்ச் செய்கை வெற்றியளித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கீரி சம்பா பயிரிடப்படுவது இதுவே முதல் முறையென கூறப்படுகின்றது.

ஜனாதிபதியின் விசேட பணிப்புரை

அமைச்சரவையின் முன் அனுமதியின்றி 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்ய மற்றும் யுக்ரேன் சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

குறுகிய காலத்தில் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டது-அலி சப்றி

தீர்வை காண முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிய ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது,ஈராண்டு என்ற குறுகிய காலத்தில் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடிந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.கிரோக்கம்,சிம்பாப்வே,ஆர்ஜன்டீனா உள்ளிட்ட நாடுகள் நெருக்கடியில் இருந்து மீண்டும் வர 10 வருடங்களுக்கு மேலான காலம் எடுத்தது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 25, 000 வீரர்களை தேடும் பணியில் பொலிஸார்

நாட்டில் இராணுவ முகாம்களில் இருந்து விடுமுறை பெற்று வீடுகளுக்கு சென்று மீண்டும் முகாம்களுக்கு வருகை தராத இராணுவ வீரர்கள் 25,000 பேரை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

புதையல் தோண்டிய வங்கி முகாமையாளர் உட்பட 5 பேர் கைது

பொலன்நறுவை இசிப்பத்தன மாவத்தையில் சிறுநீரக வைத்தியசாலைக்கு பின்னால் உள்ள உணவகம் ஒன்றின் நிலத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட தம்புள்ளை பிரதேசத்தில் இயங்கும் தனியார் வங்கியின் முகாமையாளர் உட்பட 5 பேர்,புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், பெறுமதியான வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் பல பகுதிகளில் அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு

நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் தெரியாத நான்கு சடலங்கள் குருவிட்ட, பேலியகொட, மாரவில மற்றும் ராகம பொலிஸ் பிரிவுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் மற்றுமொரு கட்டம் ஆரம்பம்

100,000 கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மற்றுமொரு கட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்துள்ளார்.

இரண்டாயிரத்திற்கும் அதிகமான தாதியர்கள் தொழிலை விட்டு விலகல்

கடந்த இரு வருடங்களில் மாத்திரம் 2,528 தாதியர்கள் தொழிலில் இருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவராச்சி தெரிவித்துள்ளார்.

ஒப்பிட்டளவில் டெங்கு நோய் தாக்கும் குறைவு

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 10,417 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5,181 டெங்கு நோயாளர்களே் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 4 விமானங்கள் இன்று (25) காலை தாமதமாக தமது சேவையை ஆரம்பித்துள்ளன.பணியாளர்கள் சிலர் பணிகளில் ஈடுபடாமையினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய வானிலை

மேல்,வடமேல், தென், சப்ரகமுவ , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.