இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளாத கச்சைதீவு அந்தோனியார் திருவிழா!: பின்னணி காரணம் என்ன?

OruvanOruvan

Kachaitheevu st.anthony's festival

தமிழக மீனவர்கள் இம்முறை கச்சைதீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்துகொள்ளவில்லை.

இலங்கைக் கடற்படையினர் தம்மைக் கைது செய்வதாகவும் தமது மீன்பிடிப் படகுகளை சேதப்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியே இம் முறை திருவிழாவில் பங்குகொள்ளவில்லை.

சுமார் 3500 பேர் திருவிழாவில் பங்குபற்றியதாக யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தெரிவித்திருந்தார்.

ஆனால், இம்முறை தமிழக மீனவர்களும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலிருந்தும் மக்கள் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கச்சைதீவை மீண்டும் இந்தியா தமது பிரதேசமாக்க வேண்டுமென தமிழகத்தில் கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் கச்சைதீவு திருவிழாவில் பங்குகொள்ளாமை பல கேள்விகள், சந்தேகங்களை எழுப்பியுள்ளன.