யாழில் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆலயங்களில் பூஜைகளுக்கு அனுமதி: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

North & East 25.02.2024

யாழில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆலயங்களில் வாராந்த பூஜைகளுக்கு அனுமதி

யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள கட்டுவான் முத்துமாரி அம்மன் கோவில், வாசவிளான் மணம்பிறை கோவில், வாசவிளான் சிவம் கோவில், வாசவிளான் நாக கோவில், பலாலி ராஜ ராஜேஸ்வரி கோவில், பலாலி நாக தம்பிலான் கோவில், பலாலி சக்திவேலி முருகன் கோவில் ஆகிய ஏழு ஆலயங்களில் வாராந்த பூஜைகளை நடத்த இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. பக்தர்களுக்கு தேவையான சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இராணுவம் வழங்கவுள்ளது.

கிண்ணியாவில் கிளைமோர் குண்டு மீட்பு

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் சின்னத் தோட்டம் குப்பை கொட்டும் பிரதேசத்தில் நேற்று (24) மாலை கிளைமோர் குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

பலாலியில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டமைக்கு சுகாஷ் கண்டனம்

யாழ்-பலலி, வயாவிளானிற்கு பணி நிமித்தம் சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அவர்களின் புகைப்படக் கருவிகளைப் பறித்து, ஒளிப்பதிவுகளை அழித்த இலங்கைப் படையினரின் அராஜகச் செயற்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் வன்மையாக கண்டித்துள்ளார்.

யாழ் மீனவர்களின் வலைகளை வெட்டி அழித்த இந்திய மீனவர்கள்

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பிற்குள் நேற்று சட்டவிரோதமாக பிரவேசித்த சுமார் 20 இந்திய மீன்பிடி படகுகள், யாழ்ப்பாண மீனவர்களுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட வலைகளை வெட்டி அழித்துள்ளதாகவும் இதன் மூலம் மீனவர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாவுக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் வெற்றிலைக்கேணி மீனவர் சங்கத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் கைது

வவுனியாவில் முதியவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு கைத்தொலைபேசியைினை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.