சம்பள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி விளக்கம்: விசாரணைக்கு அழைக்குமாறு பரிந்துரை

OruvanOruvan

Central Bank Of SriLanka

இலங்கை மத்திய வங்கி, ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கி அதன் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டை இன்று வெளியிடப்பட்ட அறிக்கையினூடாக வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக சபை அனுமதியுடன் தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கமைய இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நிதியமைச்சருக்கு கடிதம்

கடந்த 22ஆம் திகதி நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மத்திய வங்கி ஆளுநரால் கடிதம் ஒன்று அனுப்புப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஊழியர்களின் அண்மைய சம்பள அதிகரிப்பின் பின்னணியில் உள்ள செயல்முறை மற்றும் நியாயம் தொடர்பில் , உரிய நாடாளுமன்றக் குழுவின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்கு வாய்ப்பினை வழங்குமாறு குறித்த கடிதத்தினூடாக மத்திய வங்கியின் ஆளுநர், ஜனாதிபதியிடம் எழுத்துமூலக் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் உரிய நாடாளுமன்றக் குழுவின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்கு மத்திய வங்கி தயாராகவுள்ளதாகவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைக்கு அழைக்குமாறு பரிந்துரை

இதேவேளை, சம்பள அதிகரிப்பு தொடர்பான அண்மைய சர்ச்சைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை பொது நிதி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பரிந்துரைத்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மத்தியவங்கிதமது ஊழியர்களின் சம்பளத்தை 70 சதவீதம்அதிகரித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானதுடன்,இந்தநடவடிக்கைஆளும்கட்சிமற்றும்எதிர்க்கட்சிநாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளானது.