இலங்கையில் அடுத்த ஜனாதிபதி யார்?: மக்கள் சிறந்த திட்டத்திற்காய் காத்திருக்கின்றனர்

OruvanOruvan

President Ranil

தென்னிலங்கையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. புதிய கூட்டணிகளுக்கான வேலைகளும் காய்நகர்த்தல்களும் வெட்டுக்குத்துக்களும் அரங்கேறிவருகின்றன. ஜனாதிபதி ஆசனத்தைப் பிடிப்பதற்கு மும்முனை போட்டி இடம்பெற்றுவருகின்றது.

அனுரகுமார திஸாநாயக்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தந்திரங்களை வகுத்துவருகின்றன.

மறுபுறத்தே தமிழ்த் தலைமைகள் தனித்து வேட்பாளரை நிறுவத்துவது தொடர்பில் ஆலோசித்துவருகின்றனர்.

நாட்டில் இனவாத அரசியல் பேசி ஆட்சி ஏறியவர்களுக்கு பொருளாதார நெருக்கடி பாரிய சவாலாக இருக்கின்றது மீண்டும் இனவாத அரசியலை அரங்கேற்றுவதற்கு.

சிங்கள மக்கள் தற்போது பொருளாதார மீட்சியையே எதிர்பார்க்கின்றனர். தொடர்ந்தும் அவர்களை புலி, பிரிவினைவாதம், தேசிய பாதுகாப்பின்மை என பேசி ஏமாற்ற முடியாது.

நாட்டு மக்கள் மத்தியில் மன மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இளைய தலைமுறையினர் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். சர்வதேச ஆட்சி முறைகளையும், பொருளாதார கொள்கைகளையும் அறியத் தொடங்கிவிட்டார்கள்.

மக்களை முட்டாளாக்கி ஆட்சிப் பீடம் ஏறிய காலம் மலையேறிவிட்டது. மேற்கத்தைய நாட்டு அரசியலைப் போன்று பொருளாதார திட்டங்களும், அபிவிருத்தி மற்றும் நலத்திட்டங்களையுமே மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

மக்களின் வாழ்வாதார முன்னேற்றம்

வேலை வாய்ப்பு, கல்வி, வருமானம், சுகாதார மேம்பாடு என்பனவே இன்று தேவையாகவுள்ளது. நாட்டில் அச்சுறுத்தல் இல்லை. வெளிநாடுகளிலிருந்தும் எந்த அச்சுறுத்தலும் இல்லை.

ஆகவே தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்பு என்ற ஒற்றை வசனத்தை பேசி மக்களை அதன்பால் ஈர்க்க முடியாது. ஆட்சியாளர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிப்படைந்துள்ள மக்களை மீட்பதற்கு சிறந்த பொருளாதார கொள்கையினை யார் கொண்டு வருகிறாரோ அவரே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி. மக்களின் ஆணை அவருக்கே.

சதிகளும், சூழ்ச்சிகளும், ஏமாற்று வேலைகளும் இனியும் மக்களிடம் எடுபடாது என்தே தற்போதை அரசியல் களநிலவரம்