மாத்தளை முத்துமாரி அம்மன் ஆலய மாசி மக மகோற்சவ பஞ்ச ரத உற்சவம்: திரண்டு வந்த பக்தர்கள்
மாத்தளை முத்துமாரி அம்மன் ஆலய மாசி மக மகோற்சவ பஞ்ச ரத உற்சவம் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்று வருகின்றது.
வடக்கு நோக்கி 108 அடி நவதள நவ கலசம் கொண்ட நவதள இராஜகோபுரத்தை கொண்ட வரலாற்றுப் பெருமையை மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் பெற்றுள்ளது.
மாத்தளை நகரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவம் கடந்த 02.02.24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இவ்விழாவானது பகல் இரவு திருவிழாக்களாக நடைபெற்று வருகின்றது.
மாசி மக மகோற்சவ பஞ்ச ரத உற்சவம் இடம்பெற்ற நிலையில், நாளை மாலை 7.00 மணிக்கு கற்பூரத் திருவிழா நடைபெறும்.
இந்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இன, மத, பேதமின்றி எல்லா இன மக்களும் கலந்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.