உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்: இல்லையேல் அரசாங்கத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை

OruvanOruvan

Sri Lankan Presidential Election

ஜனாதிபதி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தவில்லை என்றால், எதிர்வரும் ஒக்டோபர் மாதம்18 ஆம் திகதிக்கு பின்னர், அரசாங்கத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகி தற்போது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

இது போராட்டமா,சட்ட நடவடிக்கையா அல்லது வேறு விதமான செயற்பாடா என்பதை தற்போது கூற முடியாது.

இந்த பாரிய எதிர்ப்பு நடவடிக்கைக்காக எதிரணியில் உள்ள சகல தரப்பினரையும் இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். எதிரணியில் உள்ள சில கட்சிகள் இதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலை இந்த வருடத்தில் உரிய காலத்திற்குள் நடத்தவில்லை என்றால், எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், சட்டப்படியான அரசாங்கமாக இருக்காது. அது சட்டவிரோத அரசாங்கமாகவே இருக்கும்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது இலகுவான காரியமல்ல

அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிப்பது இலகுவான காரியமல்ல. அந்த பதவி அரசியலமைப்புச் சட்டத்துடன் நேரடியாக பிணைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அடிப்படை அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கு முன்னர் மக்கள் ஆணையை பிரதிபலிக்கும் பாராளுமன்றத்துடன் கூடிய அரசாங்கம் உருவாக வேண்டும்.

அதன் பின்னர், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் போது, கிடைக்கும் முடிவுகளை எந்த பிரஜையும் சவாலுக்கு உட்படுத்த முடியும்.

எனினும் அதற்கு முன்னர் செய்ய வேண்டிய பல விடயங்கள் இருப்பதாகவும் இதனால், ஜனாதிபதி தேர்தலை நடத்துவது அவசியம் எனவும் அந்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.