யாழ் இளைஞனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்: சர்வதேச பட்டப் போட்டித் திருவிழா பங்கேற்பு

OruvanOruvan

யாழ். பட்டப் போட்டித் திருவிழாவில் வெற்றி பெற்று சாதனை புரிந்த வல்வெட்டித்துறையை சேர்ந்த விநோதன் சர்வதேச ரீதியில் நடைபெறும் பட்டப்போட்டில் பங்குபற்றியுள்ளார்

தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டப் போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர் கலந்து கொண்டு இரண்டு வித்தியாசமான பட்டங்களை பறக்கவிட்டிருந்தார்.

வல்வை பட்டப் போட்டித் திருவிழாவில் அதீத திறைமையினை வெளிப்படுத்திய இவருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தமையானது தமிழ் மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி என பலரும் தெரிவித்துள்ளனர்.