ரணிலை சந்தித்த சம்பிக்க: கூட்டணியில் இணையும் மறைமுக அழைப்பும் விடுக்கப்பட்டது

OruvanOruvan

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், குடியரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பிக்க ரணவக்கவால் எழுதப்பட்ட ‘தேசதுக்கான ஒன்றிணையும் முயற்சி’ என்ற நூல் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடுகள் மார்ச் முதல் வாரத்துக்குள் எட்டப்பட்டுவிடும் என ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார,

ஐ.தே.க.வின் கரங்களை பலப்படுத்துவதற்கு ஏனைய கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துவருவதாக சம்பிக்கவிடம் கூறியுள்ளார்.

இதில் முன்னாள் ஆளுநர்கள், அமைச்சர்கள், உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஏனைய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பெருமளவானவர்கள் ஜனாதிபதியை சந்திக்கும் கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பிக்க ரணவக்கவும் தமது கூட்டணியில் இணையுமாறு விடுக்கப்பட்ட மறைமுகமாக அழைப்பாகவே இதனை ஏனைய கட்சியினர் பார்க்கின்றனர்.