இந்திய மீனவர்கள் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் அட்டூழியம்: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

north and eastern

இந்திய மீனவர்கள் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் அட்டூழியம்

யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டிருந்த குறித்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 30 லட்சம் பெறுமதியான வலைகளை இந்திய மீனவர்கள் அறுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புளொட்டின் சிரேஷ்ட உப தலைவர் நல்லநாதர் காலமானார்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) இன்று (22.02) காலமானார். உடல்நல குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

OruvanOruvan

யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்று இடமாற்றம்

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் இயங்கி வந்த மேலதிக நீதவான் நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகள், யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார்.

OruvanOruvan

வவுனியா மாவட்டத்தில் கடந்த 05 வருடங்களில் 67 யானைகள் பலி

வவுனியா மாவட்டத்தில் 2019ம் ஆண்டு தொடக்கம் 2024 வரை 67 யானைகள் பலியாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. 05 வயது தொடக்கம் 40 வயதுடைய யானைகளே இவ்வாறு பலியாகியுள்ளன.

கற்றல் செயற்பாடுகளை புறக்கணித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்று கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். விஞ்ஞான பீட மாணவர்களின் வரவு பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தள்ளனர்.

காதலர் தினம் ; மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய இருவர் கைது

காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண்ணுமே காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

எல்லை தாண்டிய ஒரு இந்திய மீனவருக்கு சிறை - 18 பேருக்கு விடுதலை

எல்லை தாண்டி வந்து 19 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான வழக்கானது இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, படகில் பயணித்த 7 இந்திய மீனவர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன் படகின் ஓட்டுனருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி வழக்கு இன்று

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற இருக்கின்றது.

கச்சத்தீவு ஆலயத்தினை சென்றடைந்த நெடுந்தீவு பங்கு குழாம்

கச்சத்தீவு திருவிழா நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், நெடுந்தீவு பங்கு தந்தை உள்ளிட்ட திருப்பணியாளர்கள் ஆயத்தப்பணிகளை முன்னிட்டு இன்று ஆலயத்தினை சென்றடைந்தனர்.

வடமராட்சியில் கட்டைக்காடு கடற்பகுதியில் கரை ஒதுங்கிய கூம்பு வடிவிலான கூடாரம்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது. மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

OruvanOruvan

யாழ்.போதனா மருத்துவமனையில் ரகளை செய்தவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் உறவினர் ஒருவர் காரைநகரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட போது உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலத்தை விரைவாகப் பெற்றுத் தருமாறு வைத்தியசாலையின் மேற்பார்வையாளர் அலுவலகத்திற்கு சென்று தகாத வார்த்தைகளை பயன்படுத்திய சந்தேக நபர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் 750 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு மாத காலத்தினுள் சுமார் 750 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த 531 பேரும் உள்ளடங்கியுள்ளனர். குற்றச் செயல்களுடன் ஈடுபட்டமை தொடர்பாக நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஏனையோர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.