பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸார் புதிய தகவல்: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்

OruvanOruvan

பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸார் புதிய தகவல்

யாழ்ப்பாணம், நீர்வேலி உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன், வீடொன்றில் புகுந்து வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பியபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

அந்நிய செலாவணியை குறைக்கும் இரவு நேர பொருளாதாரம்

இரவு நேர பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70 வீதம் வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 13 பேர் டுபாயில் கைது

இலங்கையில் இடம்பெற்ற திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 13 பேர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் பெலியத்த பகுதியில் ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவு முன்னெடுத்துள்ளது.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இது நாளை மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

நானுஓயா ரதெல்ல பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்து - 08 பேர் காயம்

நானுஓயா ரதெல்ல குறுக்கு வழி வீதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்றிரவு (22) விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மாத்தறை பிரதேசத்தில் இருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

OruvanOruvan

வெலிவிட்ட சுத்தா கைது

சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினருமான ‘வெலிவிட்ட சுத்தா’ என அழைக்கப்படும் சுதத் கித்சிறியை 15 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடுவெல பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

மாணவர்களுக்கு இடையே மோதல்; 17 பேர் வைத்தியசாலையில்

ரன்தம்பே தேசிய கேடட் பயிற்சி நிலையத்தில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 17 மாணவர்கள் மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவி ஒருவரை கேலி செய்ததால் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மின் கட்டண திருத்த யோசனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம்

இலங்கை மின்சார சபையின் (CEB) மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான திருத்தப்பட்ட யோசனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) பெற்றுள்ளது.

சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் என்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மன்றில் இன்று வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

பூசா சிறைச்சாலையில் பல கடத்தல் பொருட்கள் மீட்பு

காலி, பூசா சிறைச்சாலையின் இரண்டு அறைக்குள் பல கடத்தல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட குறித்த பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் விசேட அதிரடிப் படை கமாண்டன்ட் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

Contraband items seized from 2 cells at Boossa high-security prison

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணியை தொடர நிதி கிடைக்கபெறவில்லை

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அகழ்வு பணியினை தொடர்ந்து நடாத்த நிதி கிடைக்கபெறவில்லை தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.

7வது மாடியில் இருந்து விழுந்து 74 வயதான பெண் மரணம்

கொழும்பு பம்பலப்பிட்டி மிலாகிரிய அவனியூவில் உள் ஏசியன் தொடர்மாடி வீடமைப்புத் தொகுதியில் 7 வது மாடியில் இருந்து கீழே விழுந்து 74 வயதான ஜெயனந்தன் வேலு அம்மா என்ற பெண்மணி உயிரிழந்துள்ளார். இந்த பெண்மணி நோய் ஒன்றுக்காக சிகிச்சை பெற்று வந்தவர் என பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஆயிரக்கணக்கில் வெதுப்பகங்கள் மூடல்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 1000 வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். முட்டை மற்றும் வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரித்தமையும் இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொட்டுக்கட்சி அரசின் பங்காளியாக இருந்தாலும் கேட்பவை கிடைப்பதில்லை-சந்திரசேன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தாலும் தாம் முன்வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை எனவும் இதனால்,ஊடகங்கள் வாயிலான இதனை புரிய வைப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தான் விவசாய அமைச்சராக பதவி வகித்த போது, அன்றைய மகிந்த ராஜபக்ச பசளை மானியத்தை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

சரத் பொன்சேகா மட்டுமல்ல அனுரகுமாரவும் என் வீட்டுக்கு வந்தார்

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கூறுவது போல், சரத் பொன்சேகா மாத்திரம் தனது வீட்டுக்கு வந்து சென்றவர் அல்ல எனவும் ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச,அனுரகுமார திஸாநாயக்க என அனைவரும் தனது வீட்டுக்கு வந்துள்ளனர் எனவும் ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் ; நான்கு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டில் கைதான நான்கு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வியட்நாம் இடையே கைச்சாத்தானது ஒப்பந்தம்

இலங்கை வியட்நாம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கொழும்பில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது மாநாட்டில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வியட்நாம் நாட்டின் விவசாயத்துறை உட்பட கிராம அபிவிருத்தி அமைச்சர் மின்மொஹான் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு

அமெரிக்க‍ டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல், விற்பனை பெறுமதி முறையே 306.53 ரூபாவாகவும், 316.06 ரூபாவாகவும் காணப்படுகிறது.

OruvanOruvan

Today’s CBSL official exchange rates

தேஷபந்துவின் பதவிக்காலம் முடிவடைகிறது

பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிவரும் தேஷபந்து தென்னகோனின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் மூன்று மாத காலத்திற்கு பொலிஸ்மா அதிபராக பணியாற்ற ஜனாதிபதியால் இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்திற்கு நடாத்தப்படும் ; நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

அரசியல் அமைப்பு விதிகளுக்கு இனங்க ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்திற்கு நடாத்தப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுஜன பெரமுனவின் கதவு பொன்சேகாவுக்கு திறந்திருக்கிறது

நான் பிறந்தது முதல் எதிர்க்கட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு திறக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் சலூன் கதவு, முப்பதாண்டு யுத்தத்தை நிறைவு செய்ய மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்ட பொன்சேகாவுக்கும் திறந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருமாறு ஜேசன் மோமோவாவுக்கு அமெரிக்க தூதுவர் அழைப்பு!

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், ஹொலிவுட் நட்சத்திரமான ஜேசன் மோமோவாவுக்கு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். இலங்கையின் சதுப்புநில மறுசீரமைப்பு முயற்சிகளை ஆராய்வதற்காக அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

OruvanOruvan

U.S. Ambassador Invites Jason Momoa

காலிமுகத்திடல் போராட்டம் களம் முதலீட்டுக்கு வழங்கப்படாது-பிரசன்ன ரணதுங்க

காலிமுகத்திடலில் போராட்டம் நடைபெற்ற இடத்தை முதலீட்டாளர்கள் எவருக்கும் வழங்கப்படவில்லை எனவும் விசும்பாயவை அரசின் எவ்வித மதிப்பீடும் இன்றி வழங்க போவதில்லை எனவும் நாட்டுக்கு முதலீட்டாளர்கள் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வ6ரும் போது, எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் தவறான விடயங்களை பரப்பி வருவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா என்பதை கண்டறிய வேண்டும்-ஜோன்ஸ்டன்

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட கொலையா அல்லது சாதாரண விபத்தால் ஏற்பட்ட மரணமா என்பதை துரிதமாக கண்டறிந்து, குற்றவாளிகள் இருப்பார்கள் எனில் அவர்களுக்கு தண்டனை வழங்குமாறும் மரணத்தில் சந்தேகம் இருப்பதன் காரணமாகவே அவரது மனைவி குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று சபையில் தெரிவித்துள்ளார்.

400 ரயில் கடவைகளுக்கு பாதுகாப்பு கதவுகள்

400 ரயில் கடவைகளுக்கு பாதுகாப்பு கதவுகளை நிறுவ ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்காக 1200 பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் இராஜினாமா

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதற்காக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் தளத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

முன்னணி போதைப் பொருள் வர்த்தகர் வெலிவிட்ட சுத்தா கைது

நாட்டின் முன்னணி போதைப்பொருள் வியாபாரிகளில் ஒருவரான "வெலிவிட்ட சுத்தா" இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடுவலை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் வாய் புற்றுநோய்

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வைத்தியர் தனுஜா தக்ஷிலி பத்திராஜா தெரிவித்துள்ளார். இதேவேளை பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் வாய்ப் புற்றுநோயின் தாக்கம் ஓரளவு குறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிக்கு சுட்டுக் கொலை; பெண்ணொருவர் கைது

கடந்த மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறைச்சாலைகளில் வாடும் சிறுவர்கள்

இலங்கையின் சிறைச்சாலைகளில் இரண்டாயிரம் வரையான சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார். 65 வீதமானவர்கள் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள் காரணமாகவே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

இந்த வருடம் அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகின்றது.

6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு, கம்பஹா, புத்தளம், குருணாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய 6 மாவட்டங்களுக்கு அதிக வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறையில் கூரையில் இருந்து தவறி வீழ்ந்தவர் மரணம்

களுத்துறை மாவட்டம் ஹொரணை, புலத்சிங்கள பகுதியில் வீடுடொன்றின் கூரையில் திருத்த வேலைகள் செய்வதற்காகச் சென்ற நபரொருவர் தவறிவிழுந்து உயிரிழந்துள்ளார்.தெரணியகல பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கூரையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தாமரைக் கோபுரம் சிவப்பு நிறத்தில் ஔிரவுள்ளது

சர்வதேச மூளையழற்சி நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று வியாழக்கிமை (22) தாமரை கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிரவிடப்படவுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆபத்துமிக்க நரம்பியல் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்செபாலிடிஸ் இன்டர்நேஷனலின் அண்மைய திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் தாமரைக் கோபுரத்தை சிவப்பு நிறத்தில் ஔிர வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகளின் பாதணி வவுச்சரை விற்று மதுபானம் அருந்திய தந்தை

கல்வி அமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்பட்ட பாதணி வவுச்சரை திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த தந்தை ஒருவர் விற்று ஒருவர் மதுபானம் அருந்தியுள்ளார். பாதணிகளுக்காக வழங்கப்பட்ட இலவச வவுச்சர்களின் ஊடாக பாதணிகளை கொள்வனவு செய்யாது, பழைய பாதணிகளுடன் பாடசாலைக்கு வரும் மாணவர்களை அழைத்து ஆசிரியர்கள் நடத்திய விசாரணையின் போது குறித்த விடயம் தெரியவந்துள்ளது.