இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் நங்கூரமிடவுள்ள சீன கப்பல்கள்: கடல் மார்க்கத்திலும் கைகோர்க்கும் சீனா-இலங்கை

OruvanOruvan

Sri Lanka China Shipping

இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் சீன கப்பல்கள் நங்கூரமிடவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், சீனாவின் 50 சொகுசு கப்பல்கள் கொழும்பு, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களில் நங்கூரமிடப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வருடம் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி வரை 350,000 சுற்றுலாப் பயணிகளுக்கும் மேலாக இலங்கைக்கு வந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, சீன சுற்றுலாப் பயணிகளுடன் 50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.