கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி மீது தாக்குதல்: பணிப்பகிஸ்கரிப்பில் ஊழியர்கள்

OruvanOruvan

Protest

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்பாக அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் இன்று குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆசிரிய இடமாற்றம் தொடர்பிலான மேன்முறையீட்டுச்சபை கூட்டம் கூடப்பட்ட பேது, அதில் பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கும் ஆசிரியர் சேவை சங்க உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பேது, கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி ஒருவர், ஆசிரிய சங்க உறுப்பினரால் தாக்கப்பட்டுள்ளார்.

அதனை கண்டிக்கும் முகமாகவே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் விடயம் தொடர்பிலான மகஜர் ஒன்று கிழக்கு மாகாண கல்வித் திணைக்களச் செயலாளரிடம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.