பேக்கேஜ் பெல்ட் பழுதினால் பயணிகள் சிரமம்: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்....
பேக்கேஜ் பெல்ட் பழுதினால் பயணிகள் சிரமம்
கடந்த 13ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பேக்கேஜ் பெல்ட் (Baggage Belt) திடீரென பழுதடைந்தந்தயைடுத்து பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். விமான நிலைய பணியாளர்கள் குழுவொன்றின் அலட்சியம் காரணமாக இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான நேரடி உள்நாட்டு விமான சேவைகள் மீள் ஆரம்பம்
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான நேரடி உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் நளின் பெரேரா தெரிவித்துள்ளார்.மேலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு விமான சேவைகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் முன்னாள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனித இம்யூனோகுளோபியூலின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தமிழரசு கட்சி சார்பில் மன்றில் முன்னிலையாகும் சுமந்திரன்
தமிழரசு கட்சி சார்பில் நீதிமன்றில் முன்னிலையாக தாம் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்துள்ள நிலையில் கட்சியின் தலைவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் கட்சி சார்பில் மன்றில் முன்னிலையாக தாம் தயார் என சுமந்திரன் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
”அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தினால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்டாது.அந்த வேலைத்திட்டத்தினால் விவசாய தேவைகளுக்கும், குடிநீர் தேவைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.” அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டத்தை இன்று மக்கள் பாவனைக்காக கையளித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் பெருந்தோட்ட மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள்
பொருளாதார ரீதியில் பெருந்தோட்ட மக்கள் அடிமட்டத்தில் இருந்தாலும் , அவர்கள் புத்திசாலிகள், அதனால் ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள். என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தில் காற்றின் தரம் அதிகரிப்பு
பதுளை மாவட்டத்தின் வளிமண்டலத்தில் தூசி துகள்கள் பரவியுள்ள காரணத்தினால் பொதுமக்களை கவனமாக இருக்குமாறு குறித்த மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எம். எல் உதயகுமார அறிவுறுத்தியுள்ளார் .
முகநூல் தொடர்பில் 31,548 முறைப்பாடுகள்
முகநூல் சம்பந்தமாக கடந்த 2023 ஆம் ஆண்டு 31 ஆயிரத்து 548 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அதிகளவான முறைப்பாடுகள், கொழும்பு, குருநாகல்,அனுராதபுரம் பிரதேசங்களில் இருந்து கிடைத்துள்ளதுடன் அவற்றில் 10 ஆயிரத்து 774 முறைப்பாடுகள் பெண்களுக்கு நடந்த தவறான செயல்கள் தொடர்பானது எனவும் இலங்கை கணனி அவசர பதில் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை முதல் பல அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
விலை விபரங்கள் வருமாறு:
சிவப்பு கெளபி - 55 ரூபா குறைப்பு - புதிய விலை 1095 ரூபா
வெள்ளை கெளபி - 50 ரூபா குறைப்பு - புதிய விலை 1200 ரூபா
சின்ன வெங்காயம் - 40 ரூபா குறைப்பு - புதிய விலை 325 ரூபா
டின் மீன் - 425 கிராம் 20 ரூபா குறைப்பு - புதிய விலை 575 ரூபா
காய்ந்த மிளகாய் - 20 ரூபா குறைப்பு - புதிய விலை 1210 ரூபா
பெரிய வெங்காயம் - 15 ரூபா குறைப்பு - புதிய விலை 365 ரூபா
வெள்ளை சீனி - 13 ரூபா குறைப்பு - புதிய விலை 275 ரூபா
உருளை கிழங்கு - 11 ரூபா குறைப்பு - புதிய விலை 299 ரூபா
சிவப்பரிசி - 06 ரூபா குறைப்பு - புதிய விலை 174 ரூபா
டின் மீன் - 155 கிராம் 05 ரூபா குறைப்பு - புதிய விலை 290 ரூபா
பாஸ்மதி அரிசி - 05 ரூபா குறைப்பு - புதிய விலை 760 ரூபா
நிலக்கடலை - 40 ரூபா குறைப்பு - புதிய விலை 1300 ரூபா
நாட்டில் அதிகரித்து வரும் குடும்ப வன்முறைகள்
நாட்டின் வருமானம் பாரியளவில் சுருங்கியுள்ள காரணத்தினால் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் காணப்படும் காலநிலை மாற்றம் காரணமாக விளைச்சல் குறைந்து வரும் நிலையில் வருமானம் பாரியளவில் சுருங்கியுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 'ஒடபன' கடன் திட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் 19 காரணமாக நிதி சவால்களை எதிர்கொண்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக அமுல்படுத்தப்பட்ட 'ஒடபன' கடன் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் அறிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு
நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அரசியல் பிளவுகள் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளன. தேசிய அபிவிருத்திக்கு ஒற்றுமை அவசியம் எனவும் கூறியுள்ளார்.
ஜே.வி.பிக்கு இருப்பது பேஸ்புக் அலை-பிரசன்ன ரணதுங்க
மக்கள் விடுதரல முன்னணிக்கு இருப்பது முகநூல் அலை எனவும் அந்த கட்சிக்கு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவுக்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அதனை ஒரே தடவையில் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்
அரசியல் பிளவுகள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய அபிவிருத்திக்கான ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
மேலும், பிஎம்டியின் படி, அந்தந்த அரசியல் சார்புகளுக்காக அல்ல, மாறாக தேசத்தின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஒத்துழைக்க அனைத்துக் கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
25 இலங்கையர்களை மாலைதீவு நாடு கடத்தியுள்ளது
விசா சட்டங்களை மீறியமை மற்றும் சட்டவிரோத செயல்களுடன் சம்பந்தப்பட்டடுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டள்ள 25 இலங்கையர்கள்,83 பங்களாதேஷிகள்,43 இந்தியர்கள் உட்பட 186 பேரை மாலைதீவு அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது.
தந்தையும் மகனும் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டனர்
அங்குகொலபெலஸ்ஸ,முரவெசிஹேன பிரதேசத்தில் 49 வயதான தந்தை மற்றும் மாநோயால் பாதிக்கப்பட்ட 25 வயதான மகன் ஆகியோர் தாயும் ஏனைய இரண்டு பிள்ளைகளும் விகாரைக்கு சென்றிருந்த சமயத்தில் நேற்று மாலை விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதியாளர்கள் அதிக விலையில் வெங்காயத்தினை வாங்குவதற்கு தீர்மானம்
பெரிய வெங்காய ஏற்றுமதி மீதான தடையில் இருந்து இந்தியாவிடமிருந்து விலக்கு பெறுவதற்கான இலங்கையின் முயற்சி பலனளிக்கவில்லை, இதன் விளைவாக இறக்குமதியாளர்கள் அதிக விலையில் வாங்குவதற்கு மற்ற சந்தைகளை நாடுகிறார்கள் என தெரியவந்துள்ளது.
மூன்று மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த விஞ்ஞான ஆசிரியர் கைது
மூன்று பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வட்டவளை தமிழ் பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலையான நிலையில் ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (15) நிலையான நிலையில் உள்ளது. அதன்படி டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 308.21 ரூபாவாகவும், 318.06 ரூபாவாகவும் காணப்படுகிறது - இலங்கை மத்திய வங்கி
நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி அழைப்பு
அரசியல் ரீதியாக பரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்திற்காகவோ எதிர்க்கட்சிக்காகவோ அல்லாது நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்காக அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
2024 க்கான முதல் பாடசாலை கல்வித் தவணை திங்கள் ஆரம்பம்
2024 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதல் கல்வித் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை (19) ஆரம்பிக்கப்படவுள்ளது. 2023 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை நாளையுடன் (16) நிறைவு பெறும் - கல்வி அமைச்சு
இலங்கை குற்றவாளிகள் 42 பேருக்கு இன்டர்போல் ‘சிவப்பு எச்சரிக்கை’
பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக 42 இன்டர்போல் ‘சிவப்பு அறிவித்தல்’ உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முக்கிய அதிகாரியை சந்தித்த மைத்திரி
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வொஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க வெளியுறவுத் துறையின் தென் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் துணைச் செயலர் அஃப்ரீன் அக்தருடன் (Afreen Akhter) சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவத்தை ஏற்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க இன்னும் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
‘அஸ்வெசும’ இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன
மேலும் 400,000 பயனாளிகளை தேர்வு செய்வதற்காக ‘அஸ்வெசும’ நலன்புரி உதவிகள் திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (15) தொடங்குகிறது. விண்ணப்பங்களை இணையம் அல்லது பிரதேச செயலகங்கள் மூலமாக ஒரு மாத காலத்திற்கு சமர்ப்பிக்க முடியும் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 13,000 க்கும் அதிகமாக உயர்வு - நால்வர் உயிரிழப்பு
2024 ஆம் ஆண்டின் ஆறாவது வாரத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 13,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, நான்கு பேர் இறந்துள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
பதுளையில் வளிமண்டலம் கடுமையாக பாதிப்பு - மக்களுக்கு எச்சரிக்கை
பதுளை மாவட்டத்தின் வளிமண்டலத்தில் வழமைக்கு அப்பால் தூசித் துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார தெரிவித்தார்.
உத்தேச மின்சார கட்டண திருத்தம்; மக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை இன்று ஆரம்பம்
உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் வாய்மொழி மூல கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை இன்று(15) பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மன்னாரில் வௌிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரிப்பு
பிளமிங்கோ என அழைக்கப்படும் பூநாரைகள் நூற்றுக்கணக்கில் மன்னாருக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். குறித்த வெளிநாட்டு பறவைகளைப் பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மன்னாருக்கு படையெடுத்து வருகின்றனர்.
சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறைவு
இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று(15) காலை 06.30 உடன் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
குடு சலிந்துவின் நண்பர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது
துபாயில் தலைமறைவாக இருந்த “பியுமா” என்ற குற்றக் கும்பலைச் சேர்ந்த பியும் ஹஸ்திகா இன்று(15) அதிகாலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட குழுவொன்று கைது செய்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இவர் “குடு சாலிந்து” என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக நபரான சலிந்து மல்ஷிகாவின் பிரதான நண்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பல பகுதிகளில் இடியுடன் மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை வீழச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தெமட்டகொடயில் தீப்பரவலை கட்டுப்படுத்த 6 தீயணைப்பு வாகனங்கள்
தெமட்டகொட பேஸ்லைன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வெற்று நிலத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயிணை அணைப்பதற்கு 06 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு கோர விபத்துக்கு காரணமான சாரதி கைது
2009 ஆம் ஆண்டு வெலிகந்தவிலுள்ள செவனப்பிட்டிய ரயில் கடவையில் 15 பயணிகளின் உயிர்களை காவுகொண்ட கோர விபத்துக்கு காரணமான பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்தில் மேலும் 40 பேர் காயமடைந்தனர். சமிஞ்சைகளை பொருட்படுத்தாமையின் காரணமாக விபத்து சம்பவித்தது.
வரலாறு படைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் சிங்கள மொழியில் எழுதிய முதலாவது சுயசரிதை நூலை வெளியிட்டு புதியதொரு வரலாற்றைப் படைக்கவுள்ளார். குறித்த சுயசரிதை நூல் அடுத்த மாதம் 05 ம் திகதி வெளியிடப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு சிங்களத்தில் எழுதப்படுவது இதுவே முதல் முறையாகும்
மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் 98 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.