ஹரிகரன் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சட்டத்தின் முன் நிறுத்த கோரிக்கை: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North - East news updates 13.02.2024

ஹரிகரன் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சட்டத்தின் முன் நிறுத்த கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்ச்சியை நடத்தியோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.யாழ். இசை நிகழ்வில் ஏற்பாடுகள் ஒழுங்காக இடம்பெற்றிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது. எனவே குறித்த நிறுவனம் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசாதெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு குடும்பிமலை பிரதேசத்தில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் மின்சாரம் தாக்கியதில் இரு விவசாயிகள் உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடம்பத்தைச் சேர்ந்த 51 மற்றும் 21 வயதுடைய இருவரே இவ்வாறு சடவமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சர்ச்சைகளுக்கு மத்தியில் யாழின் அழகை ரசிக்கும் தென்னிந்திய பிரபலங்கள்

யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு மத்தியில் தென்னிந்திய பிரபலங்கள் யாழ்ப்பாணத்தின் இயற்கை அழகை ரசித்து வருவதோடு, மத வழிபாடுகளிலும் ஈடப்பட்டு வருகின்றனர்.தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் மற்றும் பிரபல் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

யுத்த சூனிய பகுதிக்குள் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் நினைவேந்தல் நிகழ்வு

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் யுத்த சூனிய பகுதிக்குள் இலங்கை இராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளரான புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அந்த கட்சியின் யாழ். அலுவகலத்தில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் புதையல் தோண்டிய ஆறு பேர் கைது

யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை தேடும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த 06 நபர்களை புதுகுடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைதுசெய்துள்ளார். நெடுங்கேணி, மதவாச்சி,பதவியா,தெய்நதர, ஹக்மான போன்ற பகுதிகளை சேர்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 வயதான பாடசாலை மாணவி தற்கொலை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைபளை பிரதேசத்தில் உயர் தரப்பரீட்சைக்கு தயாராகி வந்த 18 வயதான பாடசாலை மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கடந்த வருடம் 47 குழந்தைகள் உயிரிழப்பு

யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த வருடம் 5 ஆயிரத்து 510 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கில் 500 ஏக்கரை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் வலிகாமம் வடக்கில் மக்களின் வாழ்விடங்களில் இருந்து 500 ஏக்கரை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி அப்பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டது.

வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட வேண்டும்! தர்மலிங்கம் சுரேஷ் வலியுறுத்தல்

கிழக்கை பாதுகாக்க வடக்குடன் இணைக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஊடக கற்கை வளநிலையத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.