மனம் விட்டு பேச யாரும் இல்லை என எண்ணிக்கொள்கிறார்களா?: வடக்கில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள்

OruvanOruvan

Suicide among young generation

அண்மைய தினங்களாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.

இவ்வாறான தற்கொலை சம்பவங்களுக்கு ஆளாகுபவர்கள் மத்தியில் இளைஞர்கள் அதிகளவில் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், நேற்றைய தினம் (12) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, இரணைப்பளை பிரதேசத்தில் 17 வயது நிரம்பிய பாடசாலை மாணவி ஒருவர் தன்னுடைய காதலில் ஏற்பட்ட முறிவு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

12ஆம் வகுப்பில் கல்வி கற்று வரும் குறித்த மாணவியின் தற்கொலை தொடர்பில் சந்தேகம் வெளியிட்ட பொலிஸார் தன்னுடைய காதல் முறிவு காரணமாக மனவேதனையடைந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கடந்த வருடத்தில் பல்கலைக்கழக மாணவர்களிடையே தற்கொலை வீதம் அதிகரித்து காணப்பட்டது.

OruvanOruvan

Suicide among young generation

தற்கொலைகளுக்கான காரணம் ?

அண்மையில் இவ்வாறு அதிகரித்து வரும் தற்கொலைகளுக்கான காரணம் இளைஞர்களிடம் காணப்படக்கூடிய உளநலப் பிரச்சினைகளே என உளவல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சமூக தொடர்பின்மையும் இதற்கான ஒரு காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொறுமையின்மை இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறு உளநலப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கக்கூடிய இளைஞர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய இளைஞர்கள் மத்தியில் காணப்படக்கூடிய பலதரப்பட்ட பிரச்சினைகளை மனம் விட்டு பேசவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு செவிமடுக்கவும் ஆளின்மை என தாங்கள் எண்ணிக்கொள்வதால் இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

OruvanOruvan

Suicide among young generation

போருக்கு முன்னரான நிலை!

1980ஆம் ஆண்டுகளில் யாழ் மாவட்டத்தில் தற்கொலை வீதம் 35ஆக காணப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின்னர் 2004ஆம் ஆண்டுகளில் இது 30 வீதத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், தற்போதைய இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கணிசமாக அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்களை குறைக்க அவர்களின் மனநலம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.