அன்பான செல்லப்பிராணிக்குள் ஒழிந்திருக்கும் ஆபத்தான எமன்: சிறுவர்களை குறிவைக்கும் தெரு நாய்கள்

OruvanOruvan

Dog Attack

நாய்கள் - மனிதர்களால் ஆரம்ப காலங்களில் வேட்டைக்காக வளர்க்கப்பட்டு வந்தாலும் காலப்போக்கில் அதுவே செல்லப்பிராணியாக மாறி அனைவரிலும் வீட்டில் ஒருவரை போல் மாறிவிட்டது.

ஆனால் தற்போது, இந்த நாய் இனம் சமீப காலமாக மனிதர்களுக்கு பெரும் ஆபத்தையும் உயிரை பறிக்கும் ஒரு ஜீவனாக மாறிவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

நாய்கள் தாக்குதலில் உயிரழப்போரின் எண்ணிக்கையும் சமீபகாலமாக அதிகரித்த வண்ணமே உள்ளன.

குறிப்பாக, இந்த நாய்கள் சிறுவர்களையே அதிகமான குறிவைக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலான காணொளிகள்

தெருநாய்களின் தாக்குதலுக்கு இலக்கான சம்பவங்கள் இந்தியாவிலேயே அதிகமாக பதிவாகியுள்ளது.

மேலும் கடந்த வாரம் இலங்கையில் பாடசாலை மாணவியொருவர் பாடசாலை சென்று வீடு திரும்பும் வேளையில் அந்த பகுதிக்கு வந்த சில நாய்கள் குறித்த மாணவியை கடுமையாக தாக்க முயற்சி செய்கின்றது.

அப்போது துவிச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் அந்த மாணவியை பாதுகாக்கும் காணொளியும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.

சிறுவர்கள் பாடசாலை, விளையாட அல்லத கடைக்கு எங்கு சென்றாலும் நாய்களால் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

ஆகவே, பெற்றோர்கள் பாதுகாவலர்கள் சிறுவர்கள் மீது அதிக கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும். ஒன்றும் அறியா சிறுவர்கள் நாய்கடித்து இறப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு காரணமாகும்.

OruvanOruvan

வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள்

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் பொதுவாகவே மனிதர்களோடு சேர்ந்து வாழ்கின்றன. இதனால் அவைகள் மனிதர்களை தாக்குதலானது மிகவும் குறைவு.

வீட்டு நாய்கள் பொதுவாக மனிதர்களோடு அன்பாக பழககூடிய இயல்பை கொண்டுள்ளன. மேலும் விசுவாசமாக இருக்ககூடியதாகவும் காணப்படுகின்றன.

ஆனால், தெருநாய்கள் என்நேரமும் பசியிலும் விரக்தியிலும் தெருக்களில் திரிகின்றன. சிறுவர்கள் சிறிய உருவ அமைப்பை கொண்டுள்ளதால் அவர்களை கீழே தள்ளி கடித்து தாக்குவதற்கு இலகுவாக இருக்கின்றது.

OruvanOruvan

நாய்கள் எப்போது, ஏன் மனிதர்களைக் கடிக்கின்றன? அவற்றின் நடத்தையில் ஏன் மாற்றம் வருகிறது?

ஒரு நாய் அச்சுறுத்தலுக்கு ஆளானாலோ, தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைத்தாலோ, அதிலிருந்த தன்னைக் காத்துக்கொள்ளக் கடிப்பதுதான் ஒரே வழி என முடிவெடுக்கலாம் எனவும், அந்தச் சூழலைச் சமாளிக்க அது வெறித்தனமாக மாறி தற்காத்துக் கொள்கிறது.

சில மனிதர்களும் கோபம் வந்தால், உணர்ச்சி வயப்பட்டால், சண்டை போட வேண்டும் என முடிவெடுத்தால் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்கள்.

ஒன்று கத்துவார்கள், இல்லாவிட்டால் அடிப்பார்கள். அதேபோல்தான் விலங்குகளும். முதலில் குரைக்கும். பின் கடிக்கும்.

அதேபோல், நாய்களில் தெரு நாய், செல்லப் பிராணி என வித்தியாசம் இல்லை, அவை அனைத்தும் விலங்குகள்தான்.

OruvanOruvan

தெருநாய்களுக்கும் வளர்ப்பு நாய்களுக்கும் என்ன வித்தியாசம்?

வீட்டில் வளர்க்கும் நாய்களை நிறைய பேர் செல்லம் கொஞ்சுவார்கள். சில நேரம் அதன்மேல் கோபம் கொள்வார்கள். இது ஒரு நாயின் சமநிலையான மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத செயலாகக் கருதப்படும்.

அப்போது நாய்கள் மனிதர்கள் மீது நம்பிக்கையையும், மரியாதையும் இழந்துவிடும். ஒரு உறவில் இந்த இரண்டும் இழந்துவிட்டால் அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

மேலும், இந்த தாக்குதலில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களே அதிகமாக ஈடுபடுகின்றது. தற்போது சூழலியல் மாற்றத்தால் தெருநாய்களின் செயற்பாட்டிலும் இயல்பு வாழ்க்கையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

OruvanOruvan

தெருநாய்களின் இந்த மாற்றத்துக்கு மக்கள் தொகை பெருக்கமும், நகரங்களில் இடமின்மையும் முக்கிய காரணம்.

பெரும்பாலும் கிராமப்புறங்களில் நாய்கள் ஊர் எல்லையிலோ தொலைவாகவோ இருக்கும். உணவுக்காக மட்டுமே மக்களை நெருங்கும். அவை கிராமங்களில் Scavengers என்று சொல்லும்படி, குப்பைகளில் தெருக்களில் கிடைக்கும் உணவுகளையே உண்ணும்.

தெரு நாய்களைப் பொறுத்தவரை ரேபிஸ் நோயால் (விசர்நாய்)பாதிக்கப்பட்ட நாய்கள் முரட்டுத்தனமாக இருக்கும். அச்சமயத்தில் நாய்களின் மூளை பாதிக்கப்பட்டுள்ளதால் கண்ணில் தென்படுபவர்களையெல்லாம் கடிக்கும் தன்மையோடு இருக்கும்.

OruvanOruvan