ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சில் ஏற்பட்ட திடீர் புகை !: மெல்பர்னில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

OruvanOruvan

Srilankan Airlines

ஸ்ரீலங்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான யுஎஸ் 605 என்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை நோக்கிய பயணத்தை தொடங்கிய குறித்த விமானம், பயணம் தொடங்கிய 20 ஆவது நிமிடத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தினுள் ஏற்பட்ட திடீர் புகை காரணமாக அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 100 இற்கும் அதிகமான பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானியின் நடவடிக்கை காரணமாக பயணிகளுக்கு உயிர் சேதம் இன்றி விமானம் தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.