சுற்றுலாத்துறையை மேம்படுத்த யாழ். இளைஞர்கள் முச்சக்கர வண்டி உலா: 40 நாட்களில் நாடு முழுவதும் சுற்றிவர முடிவு

OruvanOruvan

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் 40 நாட்களில் இலங்கை முழுவதையும் சுற்றி வருவதற்கான முச்சக்கர வண்டிப் பயணமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் குறித்த மூன்று இளைஞர்களும் நேற்றையதினம் முச்சக்கர வண்டிப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் பயணமானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோடை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாட்களில் சுற்றிவரவுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்து வீழ்ச்சி அடைந்ததனால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த சுற்றுலாத் துறையை மீண்டும் வளர்ச்சியடைய செய்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் வரவழைத்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த சுற்றுலாப் பயணத்தினை தாங்கள் ஆரம்பித்துள்ளதாக குறித்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.