துணி கழுத்தில் இறுகியதால் பாடசாலை மாணவன் பலி: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்...

OruvanOruvan

Short news 11.02.2024

துணி கழுத்தில் இறுகியதால் பாடசாலை மாணவன் பலி

நுவரெலியா மகஸ்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர், மரத்தில் கட்டப்பட்டிருந்த துணியால் கழுத்து நெரிக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோத வாகன பதிவு - 7 பேருக்கு எதிராக நடவடிக்கை

சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத சுமார் 400 வாகனங்களை பதிவு செய்தமை தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் 5 ஊழியர்கள் உட்பட 7 பேருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

யுக்திய நடவடிக்கையை இலஞ்சம் கொடுத்து தடுத்துநிறுத்த பார்க்கின்றனர்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகத்தை தேடும் நீதி நடவடிக்கையை(யுக்திய நடவடிக்கை) இலஞ்சம் கொடுத்து தடுத்து நிறுத்துவதற்கு கடத்தல்காரர்கள் முயற்சிப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா நோய் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு

இலங்கையில் உள்ள சுகாதார நிபுணர்கள், குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா நோயின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மலையகத்திலிருந்து இந்தியா செல்லும் மாணவர்களுக்கு இலவச வீசாவினை பெற்றுக்கொடுத்த ஜீவன்

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தில் இருந்து மார்ச் மாதம் 20ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லும் “பாய் பங்கலா பாய்“ என்ற தியட்டர்மேட்ஷ் நாடக குழுவிற்கு இலங்கை தொழிலாளர் காங்ரஷின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன்தொண்டமானினால் குறித்த தியேட்டர் மேட்ஷ் நாடக குழுவிற்கு ஒரு மில்லியன் ரூபாய் பணமும் 20 பேருக்கான
வீசாவினையும் பெற்றுகொடுத்துள்ளார்.

OruvanOruvan

அனுரகுமாரவுக்கு எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பு உள்ளது - திகா

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சித் தலைவராக வரும் வாய்ப்பு உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் இந்தியா செல்கிறார்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் இந்தியாவின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அவர் புதுடெல்லி செல்ல உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

அக்மீமன பிரதேசத்தில் ஒருதொகை துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுப்பு

காலி, அக்மீமன பிரதேசத்தில் ஒருதொகை துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அக்மீமன, தல்கஸ்யாய பிரதேசத்தில் இருந்த வெற்றுக் காணியொன்றை சுத்தம் செய்கையில் குறித்த தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தை இந்தியா இன்னும் புகழ்கின்றது! நாமல் பெருமிதம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தை இந்திய அரசாங்கம் இன்றும் கூட புகழ்ந்து பேசுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு நாடு திரும்பினார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்டு நேற்று இரவு நாடு திரும்பினார்.

பாண் விலை 170 ரூபாவாக அதிகரிக்கும் சாத்தியம்?

ஒரு இறாத்தல் பாணின் விலை 170 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு இறாத்தல் பாணின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றால், விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா தேரர் படுகொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது

கம்பஹா, மல்வத்து ஹிரிபிட்டிய விகாரையில் தேரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரைக் கைது செய்த போது அவர் பொலிஸ் பதக்கத்துடன் கூடிய உடற்பயிற்சி ஆடைகளுடன் காணப்பட்டதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.