சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியை: உணவு சமைப்பதற்கு இராணுவத்தின் உதவி பெறப்பட்டதா?

OruvanOruvan

Sanath Nishantha funeral

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகளில் உணவு சமைப்பதற்காக இலங்கை இராணுவத்தின் உதவி பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சமைப்பது தொடர்பாக பல சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், இன்று வெளியான ஆங்கில நாளிதழ் ஒன்றும் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், உணவு சமைப்பதற்கு இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், மூலப்பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் உள்ள சமையற்காரர்களே இந்த இறுதிக் கிரியைக்கான உணவை சமைக்குமாறு பணிக்கப்பட்டதாகவும், அதற்காக மேலதிக செலவுகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார். அவரது இறுதி கிரியைகளை கடந்த 28ஆம் திகதி நடைபெற்றது.

இறுதிச் சடங்கில் நன்றி உரையை ஆற்றிய இராஜாங்க அமைச்சரின் மனைவி சமரி பிரியங்கா, இறுதிச் சடங்கிற்கு உதவிய ஆயுதப்படையினருக்கு நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.