யாழ்ப்பாணத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞர் ஒருவர் கைது: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North - East News updates 11.02.2024

யாழ்ப்பாணத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே தெல்லிப்பழை பொலிஸாரால் ட்ரோனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவிஜயம்

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்தபிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்று விஜயம் செய்திருந்தனர். இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் அங்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நெல் பரவிக்கொண்டிருந்தவருக்கு நேர்ந்த கதி - பரிதாபகரமாக உயிரிழந்த சோகம்

வடமராட்சி, மந்திகை மாக்கிராய் பகுதியில் வீதியில் நெல் உலர்த்துவதற்காக, நெல்லை பரவிக்கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துகுள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Update - பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தற்கொலை செய்துள்ளார்

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வீதியை புனரமைக்க வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

சுமார் 18 வருடங்களாக புனரமைக்கப்படாத யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.