ஜே.வி.பி.யில் இணையப் போகின்றாரா ரஞ்சன் ராமநாயக்க?: வீடியோ ஆல்பம் காட்டும் குறியீடு

OruvanOruvan

Sajith Premadasa and Ranjan Ramanayake

சர்ச்சைக்குரிய அரசியல் பிரமுகராக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க, ஜே.வி.பி.யில் இணையப் போகின்றாரா என்ற பரபரப்பு அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.

அரசியல்வாதியும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் இசை வீடியோ ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது புகழ்பெற்ற கூற்றுக்களில் ஒன்றான "உன் ஒக்கோம யாளுவோ மல்லி- அவர்கள் அனைவரும் நண்பர்கள், தம்பி" என்று குறித்த ஆல்பம் பெயரிடப்பட்டுள்ளது.

எல்லா அரசியல்வாதிகளும் நண்பர்கள் என்றும், அவர்களில் எவரும் ஊழல்வாதிகளைக் கைது செய்யப் போவதில்லை என்றும், தரமற்ற மருந்துப் பொருள் மோசடி, மற்றும் வங்கிக் கொள்ளை போன்றவற்றை விமர்சிக்கும் வசனங்கள் பாடல் முழுவதும் விரவிக் காணப்படுகின்றது.

பாடலின் இறுதிக் காட்சியில் ரஞ்சன் சிவப்பு சட்டையொன்றை அணிந்த நிலையில் தோன்றுகின்றார். அது ஒரு குறிப்பு என்று கருதப்படுகின்றது.

அதன் மூலம் ரஞ்சன் ஜே.வி.பி.யில் விரைவில் இணைந்து கொள்ளக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.