தேசிய மக்கள் சக்தியின் வெற்றி குறித்து சந்திரிகா அச்சமா?: உயர்மட்ட பெண்மணிகளுடனும் சந்திப்பு

OruvanOruvan

Former President Chandrika Kumaratunga

தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் என்ற அச்சம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு உள்ளதாக லால்காந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(10) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் அண்மையில் உயர்மட்ட பெண்மணிகள் சிலரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதன் போது எதிர்வரும் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி கட்சியே வெற்றி பெறும் என்று அச்சத்தை வௌிப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் எங்கள் கட்சியின் வெற்றியை அவர்களால் தடுத்து நிறுத்தவே முடியாது என்றும் லால்காந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.