ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்குப் பதில் தேர்தலை நடத்துங்கள்!: சஜித் வலியுறுத்தல்

OruvanOruvan

Sajith Premadasa M.P

ஜனாதிபதித் தேர்தல் முறையை நீக்குவதற்குப் பதில் உரிய திகதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் இராணுவ வீரர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கப் போவதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கின்றது, ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பின் பின்னரே அதனை இல்லாதொழிக்க வேண்டும்.

அதற்காக உரிய திகதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.