இந்தியாவுடன் எங்களுக்கு எதுவித மோதலும் இல்லை என்கிறார் அனுரகுமார: 40 சொற்களில் நாளாந்த செய்தி

OruvanOruvan

Short Story 10.02.2024

இந்தியாவுடன் எங்களுக்கு எதுவித மோதலும் இல்லை என்கிறார் அனுரகுமார

இந்தியா அல்லது இந்திய மக்களுடன் தங்களுடைய கட்சிக்கு எந்த மோதலும் இல்லை என்றும்இந்திய அரசாங்கம் எடுத்த தீர்மானங்களும் அவற்றிற்கு இலங்கை அரசாங்கத்தின் பதில்களும் எங்களது கட்சியினரால் கடந்த காலங்களில் விமர்சிக்கப்பட்டது எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு கல்கந்த சந்தி பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எம்.எம்.9 ஆயுதங்களைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண திருத்தம் - அமைச்சர் கஞ்சன வெளியிட்ட அறிவிப்பு

மின் கட்டண திருத்தத்திற்கான அறிவிப்பு எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை நீக்க கூட்டப்படும் ஐ.மக்கள் சக்தியின் செயற்குழு

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரான பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை தவிசாளர் பதவியில் இருந்து நீக்குமாறு அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்து வருவதுடன் இது சம்பந்தமாக சிறப்பு செயற்குழுக்கூட்டத்தை அடுத்த வாரம் நடத்தி தீர்மானத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்களை வழங்க தடை

பணத்தை சேரித்து ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்களை வழங்குபவர்கள் சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்புடம் எனவும் ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்களை வழங்க தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இப்படியான சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

வாய்வழி புற்றுநோய் OPMD ஸ்கிரீனிங் திட்ட இலவச நடமாடும் சேவை

உலக பல் வலி தினத்தையொட்டி "வெற்றிலை, புகை பிடித்தலை தவிர்த்து வாய்ப்புற்று நோயினைத் தடுப்போம்" எனும் தொனிப்பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குற்பட்ட ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் கிராமத்தில் வசித்து வருகின்ற மக்களின் வாய்வழி புற்றுநோய் ஓ.பி.எம்.டி (OPMD) ஸ்கிரீனிங் திட்ட நடமாடும் இலவச பல் வைத்திய சேவையுடன் நேற்று விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இராமர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாமல் கண்மூடி பக்தியில் திளைத்தார்

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நாமல் எம்.பி , பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் உத்தரபிரதேச முதலமைச்சருமான மயோகியாதித்யநாத்தை சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து நேற்று விசேட பூஜைக்காக இராமர் ஆலயத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

OruvanOruvan

சபாநாயகர் - லக்‌ஷ்மன் கிரியெல்ல மோதல் ; விசாரணைக் குழு நியமனம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கடுமையாக மோதிக் கொண்ட நிலையில், லக்‌ஷ்மண் கிரியெல்ல நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை தவறான முறையில் துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டிய சபாநாயகர், அது தொடர்பில் விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ஜிந்துப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

ஜிந்துப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுவுடன், எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

பெலியத்தை ஐவர் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபரொருவர் தப்பி ஓட்டம்

பெலியத்தையில் அபேஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிசார் விரட்டிச் சென்ற நிலையில் சந்தேக நபர் கார் ஒன்றின் இடைநடுவில் லாவகமாக தப்பித்து தலைமறைவாகியுள்ளார்.

ரயிலில் மோதி காட்டு யானை பலி

ஹபரணைக்கும் கல் ஓயாவிற்கும் இடையிலான கிழக்கு ரயில் பாதையில் ரயிலுடன் மோதி காட்டு யானை உயிரிழந்துள்ளது - ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி ஆரம்பமாக்கியுள்ளது. அந்தவகையில், 4 இலட்சம் விண்ணப்பங்கள் கோரும் பணிகள் இன்று (10) ஆரம்பமாகி உள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருள் கடத்திய இளைஞர் கைது

மன்னார் - சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு வந்த 31 வயது இளைஞன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 20 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களால் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர் வரவு

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 2024 ஜனவரியில் மொத்தம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார்.

யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 663 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 175 கிராம் ஹெராயின், 171 கிராம் ஐஸ், 515 கிராம் கஞ்சா, 807 கஞ்சா செடிகள், 296 போதை மாத்திரைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன - பொதுப் பாதுகாப்பு அமைச்சு

பொலிஸாருக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு அடுத்த வாரம் முதல்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினால் அதிகரிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான உணவு, பயண மற்றும் தங்குமிடக் கொடுப்பனவு அடுத்த வார தொடக்கத்தில் வழங்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இலத்திரனியல் கருவி பொருத்தப்பட்ட காலணியுடன் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர் கைது

இலத்திரனியல் கருவி பொருத்தப்பட்ட காலணியுடன் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு புறப்பட்டுச் செல்ல நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற 28 வயதான ஒருவரை விமான நிலைய பொலிஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் மீண்டும் விற்பனை

சதொச விற்பனை வலையைமப்பில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் மீண்டும் விற்பனை செய்யப்படவுள்ளது. கடந்த சில வாரங்களாக இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் விற்றுத் தீர்ந்த நிலையில் சதொச விற்பனை நிலையங்களில் இந்திய முட்டைகள் விற்பனை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது - ஜனாதிபதி ஊடகப் பிரிவு

OruvanOruvan

President Ranil Wickremesinghe Meet External Affairs Minister Dr Jaishankar

கொழும்பில் 15 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பில் சில பகுதிகளில் இன்று மாலை 05:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணி வரை கொழும்பு 11,12, 13, 14, மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

டயானாவின் மனு ஒத்திவைப்பு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலநிலை

நாட்டில் இன்று மழையற்ற காலநிலை நிலவுவதுடன் மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.