யாழ்ப்பாணத்தில் கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

North - East News updates

யாழ்ப்பாணத்தில் கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி

யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தென்னிந்திய பிரபலங்களின் இசை நிகழ்ச்சி சிறிது நேரத்திலேயே இடைநிறுத்தப்பட்டதை கண்டித்து இன்று காலை தென்னிந்திய பிரபலமான கலா மாஸ்டரின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் யாழ்ப்பாணம் - வல்லை சந்தி பயணிகள் நிகழ் குடைக்குள் ஒட்டப்பட்டது.

OruvanOruvan

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண்(29) சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண், குழந்தை ஒன்றை பிரசவித்த நிலையில் கடந்த 11 நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று தான் வீடு திரும்பியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் கவலை

புலம்பெயர் முதலீட்டாளர் ஒருவரின் முன்முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில், இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படுவது, மக்கள் நலன் சார்ந்த எமது எதிர்பார்ப்புக்களுக்கு பின்னடைவுகளையே ஏற்படுத்தும் என்றும், இவ்வாறான சம்பவங்கள் வேதனையை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இனந்தெரியாத நபரொருவரின் சடலமொன்று பிரதேச வாசிகள் வழங்கிய தகவலுக்கமைய இன்று காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

முற்றவெளியில் அசம்பாவீதத்தில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது

யாழ்ப்பாணம் - முற்றவெளி மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அசம்பாவீதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

களைகட்டியது தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொறுப்பதிகாரி தலைமறைவு

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள கல்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமறைவாகியுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட மாட்டார்கள்

கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஆசிரிய இடமாற்ற விடயம் தொடர்பில் மீண்டும் ஜனாதிபதி செயலாளரை சந்தித்து கலந்துரையாடி கிழக்கு ஆளுனருடன் பேசி இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அம்பாறை மாவட்ட ஆசிரியர்கள் யாரும் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்கலாக எந்த மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட மாட்டாது என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.