அமெரிக்காவில் குறிவைக்கப்படும் இந்தியர்கள்: தொடரும் கொலைகளால் பொலிஸார் குழப்பத்தில்

OruvanOruvan

Indians Targeted in America

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநகரத்தில் உள்ள ஓர் உணவகத்துக்கு வெளியே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஒருவர் தலையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் அதிகாலை 2 மணிக்கு (அமெரிக்க உள்ளூர் நேரப்படி) நடந்துள்ளது.

அடித்துக்கொலை செய்யப்பட்டவர் வர்ஜினியாவில்லுள்ள நிறுவனம் ஒன்றில் நிர்வாகியாக வேலை பார்த்து வந்த, விவேக் சந்தர் தனேஜா(41) எனவும் அந்த நாட்டு பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விவேக் சந்தர் தனேஜா மீதான தாக்குதல்

இவர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் தனேஜா காயங்களுடன் இருப்பதைக் கண்டு அவரை மீட்டு வைத்தியசாயில் அனுமதித்துள்ளனர்.

என்றாலும் சிகிச்சை பலனின்றி அவர், பெப்ரவரி 7ஆம் திகதி உயிரிழந்தார்.

இவரது மரணம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதிலும் விவேக் சந்தர் தனேஜாவின் மரணத்தை பொலிஸார் கொலை என்றே பதிவு செய்துள்ளனர்.

OruvanOruvan

விவேக் சந்தர் தனேஜா

யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை

குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் அங்குள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே வாஷிங்டன் மாநகர குற்றத் தடுப்புப் பிரிவு கொலைக் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

இதுகுறித்து, கொலம்பியா மாவட்டத்தில் நடைபெறும் கொலைகளுக்கு காரணமான நபர் அல்லது நபர்களை கைது செய்து தண்டனை பெற்றுத்தரக்கூடிய வகையிலான தகவல்களைத் தரும் நபர்களுக்கு 25,000 டொலர் வரை வெகுமதி தரப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு தகவல் வழங்குவதற்கான எண்களையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் இந்தாண்டில் இதுவரையில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 6வது நபர் விவேக் சந்தராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

பொலிஸாரால் வெளியிடப்பட்ட அறிவிப்பு

காணொளிகளும் வைரலானது

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த அச்சுறுத்தலான தாக்குதல் தொடர்பில் பல காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டது.

இந்த காணொளிகளில் பல இளைஞர்கள் இரத்த காயங்களுடன் காணப்படுகின்றதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

சிக்காகோவில் படித்துவரும் இந்திய மாணவர் ஒருவர் கொள்ளையர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு, இரத்தக் காயங்களுடன் உதவிக்காக கெஞ்சும் காணொளியே அது...👇

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சையது மசாகிர் அலி என்பவரே இவ்வாறு இரத்த காயங்களுடன் காணொளியில் காணப்படுகின்றார்.

இவர் அமெரிக்காவின் சிகாகோவிலுள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்துவந்துள்ளார். இவர் மூக்கு மற்றும் வாயில் இரத்தம் ஒழுக உதவி கோரும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

OruvanOruvan

முன்னதாக, அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்த 19 வயதான இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இவரின் மர்ம மரணம் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் இந்திய மாணவரான நீல் ஆச்சாரியா, பர்டூ பல்கலை., வளாகத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

OruvanOruvan

நீல் ஆச்சாரியா

பர்டூர் பல்கலைக்கழகத்தின் ஜான் மார்டின்சன் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் தகவல் (டேட்டா) அறிவியல் படித்து வந்துள்ள நிலையிலேயே இவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

நீலின் தாயார் கௌவுரி ஆச்சாரியா தனது மகனைக் காணவில்லை, அவரைக் கண்டுபிடிக்க உதவுங்கள் என்று சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்திருத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனவரி16ஆம் திகதி ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி என்ற 25 வயது மாணவர் ஜார்ஜியாவின் லிதோனியாவில் வீடில்லாத ஒருவரால் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

மேலும், ஜனவரி மாதம், இல்லினோய்ஸ் அர்பானா சாம்பெய்ன் பல்கலைக்கழகத்துக்கு வெளியே மற்றொரு இந்திய மாணவரான அகுல் தவான் இறந்து கிடந்தார்.

இந்தியாவை சேர்ந்த 23 வயதான முனைவர் பட்ட மாணவரான சமீர் காமத் மர்மமாக இறந்தார்.

OruvanOruvan

சமீர் காமத்

இவர் பர்டூ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இந்திய வம்சாவளி மாணவர் ஆவார். கடந்த திங்கட்கிழமை இயற்கை பாதுகாப்பில் உள்ள காடுகளில் உயிரிழந்த நிலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இத்தனை சம்பவங்களையும் கடந்து வரும் முன்னர் தற்போது விவேக் சந்தர் தனேஜா கொலை செய்யப்பட்டமையானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.