ரணில் ஒரு பொருட்டல்ல, ஆனால் திசைகாட்டி சவாலானது: சொல்வது சஜித் அணி

OruvanOruvan

தேர்தல்களில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு பொருட்டல்ல என்றும் ஆனால் தங்கள் கட்சிக்கு உண்மையான சவால் தேசிய மக்கள் சக்திதான் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, தனியார் வானொலியொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது இந்தக் கருத்தை வௌியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,

“ஐக்கிய மக்கள் சக்தியை பொறுத்தவரை எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் நம்பிக்கையுடன் களமிறங்கத் தயாராக இருக்கின்றோம்.

எங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்புஒரு பொருட்டல்ல. அவர்களை நாங்கள் சவாலாகப் பார்க்கவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தியினரே உண்மையில் எங்களுக்குச் சவாலாக எழுச்சி பெற்றுள்ளார்கள்.

இருந்தும் பொதுமக்கள் ஆதரவுடன் எங்கள் கட்சியே பெரும்பான்மை வெற்றியைப் பெறும்” என்றும் தெரிவித்தார்.